நான் 1.25 கோடி கொடுக்கனுமா, நீ எனக்கு இத்தனை கோடி குடு - லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.

By Rajkumar · 8/8/2020

வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான். கடந்த சில வாரங்களாகவே சமூக வளைதளத்தில் ஒரு சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வனிதா தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் தான் இந்த விவகாரம் சமூக வளைதளத்தில் மேலும் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆரம்பத்தில் மற்ற பிரபலங்களை போல லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதாவின் திருமணம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பீட்டர் பவுலின் மனைவி பங்கேற்ற பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றபோது வனிதா மற்றும் பீட்டர் பால் அளித்த பேட்டியை கண்டு தலையில் அடித்துக் கொண்டார். இதனால் கடுப்பான வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது கணவர் ராமகிருஷ்ணனும் வனிதா மீது புகார் அளித்திருக்கிறார்கள். வனிதாவுக்கு குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.தன்னை அவதூறாக பேசிய வனிதாவிடம் மான நஷ்டம் கேட்டுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். எவ்வளவு தெரியுமா 1 கோடியே 25 லட்ச ரூபாய். அதுவும் இதனை 7 நாட்களில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

https://twitter.com/vanithavijayku1/status/1292045754471600129

இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு தற்போது வனிதா பதில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், லட்சுமி ராமகிருஷ்ணன் தேவையில்லாமல் தனது விஷயத்தில் தலையிட்டதால் தன்னுடைய பல நிகழ்ச்சிகள் கேன்சல் ஆனதாகவும், இதனால் தனக்கு பலவிதத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள வனிதா லட்சுமி ராமகிருஷ்ணன் 2.50 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full