உங்க தளபதி விஜய ஒக்கார வச்சி கேட்டா அவரே சொல்வாரு - விடீயோவை பகிர்ந்து விஜய்யை டேக் செய்த வனிதா .
சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
வீடியோவில் 1 நிமிடத்தில் பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=nVU5mHGcrd4&feature=youtu.be
நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா.
இதையும் பாருங்க : முன்பு மாடர்ன் உடை, தற்போது ட்ரெடிஷனல் உடையா. மீண்டும் லைக்ஸ்களை அள்ளும் இந்திரஜாவின் புகைப்படம்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ரீ-என்ட்ரியாக அமைந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சந்திரலேகா' தொடரில் சிறப்பு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டிச் சென்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா விஜய் குறித்து பேசி இருந்தார்.
https://twitter.com/vanithavijayku1/status/1232569958569132034
அதில்,வாழ்வில் நான் பெற்ற அனுபவத்தை வைத்து பலருக்கும் அறிவுரைகளை சொல்வேன் அதனை எடுத்துக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவர்களுடைய விருப்பம் அவ்வளவு ஏன் உங்களுடைய தளபதி விஜய்யை உட்கார வைத்து நீங்கள் கேட்டால் கூட அவர் சொல்லுவார் அவள் அப்போதே சொன்னாள் என்று. விஜய் அப்போது புதுமுகமாக இருந்தால் நான் போதே அவருடன் பேசும்போது நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருக்கிறேன் ஆனால் அவர் அதனை நம்ப அவள் உனக்கு என்னை பிடிக்கும் என்பதால் சும்மா சொல்லாதே என்று கூறினாள் இருந்தாலும் நான் அப்போதே சொன்னேன் நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று என கூறியுள்ள வனிதா இந்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் விஜய்யை டேக் செய்து உங்களை நினைவு கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.