கவின் குறித்து ட்வீட் செய்த வனிதா.! அடுத்து வனிதாவின் ஆதரவு இந்த போட்டியாளருக்கு தானாம்.!

By Rajkumar · 27/9/2019

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று கவின் வெளியேறிய செய்திதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் பிக்பாஸ் அறிவித்திருந்த 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகையை எடுத்துக்கொண்டு கவின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.கவின் வெறியேறியது சக போட்டியாளர்களும் அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

https://twitter.com/vanithavijayku1/status/1177278737257091072

நேற்றைய நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் எவ்வளவு கூறியும் அவர்களின் பேச்சைக் கேட்காத கவின், நான் இந்த முடிவை தெளிவாகத்தான் எடுத்திருக்கிறேன் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார். கவின் வெளியேறியதால் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த வாரம் நடைபெற்ற நேரடி நாமினேஷனில் முகேனைத் தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுநாள் வரை லாஸ்லியாவிற்கு ஆதரவாக இருந்த கவின் வெளியேறியதால் தற்போது லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் ஆதரவு இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியாவிற்கு தனது ஆதரவை தெரிவிப்பதாக முன்னாள் போட்டியாளர் வனிதா ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/vanithavijayku1/status/1177282007572701184

https://twitter.com/vanithavijayku1/status/1177281981454798848

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா என்னுடைய ஓட்டு லாரி அவருக்குத்தான் இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம் இந்த தருணத்தில் அந்த பெண் தவறான தேர்வு இல்லை அவரை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். அவள் ஒரு டார்லிங் எனக்கு மற்றபடி மற்றவர்கள் மேல் எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று பதிவிட்டுள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full