அவர் எனக்கு தளபதி கிடையாது. விஜய் குறித்து பேசிய வனிதா. வறுத்தெடுத்த சூர்யா அக்கா.

By Rajkumar · 9/7/2020

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

https://www.youtube.com/watch?v=WmG6PM4-Oi8&feature=youtu.be

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா. சமீபத்தில் வனிதாவின் திருமணத்தை விமர்சித்த பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்களை வனிதா திட்டி தீர்த்ததால் அவர்கள் இருவருமே வானிதாவிற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

இதையும் பாருங்க : ஹீரோயின் ஆன பின்னர் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் வந்த வாய்ப்பு - தவறவிட்டுள்ள ஷாலினி.

இப்படி ஒரு நிலையில் யூட்யூபில் சூர்யா தேவி என்பவரின் கணக்கிலிருந்து சில வீடியோக்கள் வைரலாக பேசப்பட்டு வந்தது. அந்த பெண்மணி வெளியிட்டுள்ள சில வீடியோக்களில் வனிதாவை வறுத்து எடுத்து இருக்கிறார். மேலும் வனிதா விஜயகுமார் திட்டத்தான் யூடியூப் சேனலை ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் இதற்கு பதில் சொன்ன வனிதா அவர் மீது வழக்கு தொடரப் போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று தனது யூடியூப் சேனல் லைவ் வந்தபோது விஜய் குறித்து பேசிஇருந்தார் வனிதா.

https://www.youtube.com/watch?v=EKjc-NAKxR0&feature=youtu.be

அதில் விஜய் உங்களுக்குத்தான் தளபதி எனக்கு அவர் தளபதி கிடையாது.எனக்கு அவர் ஒரு நல்ல நண்பர் அவர்தான் எனக்கு சொல்லி கொடுத்தார்.உன்னை பற்றி மற்றவர்கள் பேசுகிறார்கள் என்றால் நீ பறந்து கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம் என்று சொன்னார். வனிதாவின் இந்த வீடியோவிற்கு பதிலடி கொடுத்துள்ள சூர்யா தேவி வழக்கம்போல வனிதாவை வறுத்து எடுத்து உள்ளார் மேலும் விஜய் குறித்து பேச உனக்கு எந்த தகுதியும் கிடையாது என்றும் கூறியுள்ளார்

behindtalkies AMP · Quick view
View full