சர்ச்சையை கிளப்பிய தஞ்சை மக்களை பற்றிய அவதூறு பேச்சு - மீண்டும் ட்விட்டர் வந்து ட்வீட் செய்த வனிதா.

By Rajkumar · 23/7/2020

கடந்த ஒரு சில வாரமாகவே வனிதா தான் சமூக வலைதளத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண விஷயம் தற்போது பெரும் சர்ச்சையை சிக்கி இருக்கிறது. மேலும், விவாகரத்து கொடுக்காமல் எப்படி வேறு ஒரு பெண்ணின் கணவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் தஞ்சாவூர் மக்கள் குறித்து வனிதா பேசியுள்ள ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

https://twitter.com/vanithavijayku1/status/1286275435446198273

தஞ்சாவூர் மக்களைப் பற்றி நடிகை வனிதா பேசியது சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்வார்கள். வீட்டுக்கு வீடு இது சகஜம், பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று வனிதா கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா அவரது பேச்சை உடனே திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். காவல்துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் ப ஜ க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.இந்த நிலையில் இந்த விவகாரத்தால் மீண்டும் தனது ட்விட்டரில் பக்கத்தில் வந்துள்ள வனிதா மன்னிப்பு கேட்டுள்ளார்.

https://twitter.com/vanithavijayku1/status/1286275445118230528

நான் தவறு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்க தயங்க மாட்டேன் ஆனால் நான் பேசிய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம் இருப்பினும் தந்தை மக்களுக்கு நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் நான் எதையும் குறிப்பிட்டு அப்படி சொல்லவில்லை ஒருவேளை அது உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றென்றும் தலை வணங்குகிறேன் என் தஞ்சை மண்ணிற்கு என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full