அவரை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் - ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய குடும்பம், கோபத்தில் வெடித்த வனிதா

By subhashini · 23/2/2024

தன்னுடைய தந்தை விஜயகுமார் குறித்து வனிதா பேசியிருக்கும் பழைய பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விஜயகுமார் குடும்பம்:

மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். ஆனால், அருண் விஜய்யின் அக்கா அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார் அனிதா. கடந்த ஆண்டு அனிதா மகள் தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பொதுவாக விஜயகுமார் குடும்பத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு விசேஷம் என்றாலும் ஒன்று கூடி வருவார்கள்.

https://www.youtube.com/watch?v=XhLt_JZeRPI

அனிதா விஜயகுமார் மகள் திருமணம்:

இதற்காக கடந்த சில தினங்களாக மெஹந்தி பங்ஷன், சங்கீத் பங்ஷன், ஹல்தி பங்ஷன் என திருவிழா போல் விஜயகுமார் வீடு இருந்தது. சில தினங்களுக்கு முன் தியாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பலருமே தியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். வழக்கம்போல் வனிதா தான் இந்த விசேஷத்தில் கலந்து கொள்ளவில்லை. காரணம், சில வருடங்களுக்கு முன்பு வனிதா மற்றும் விஜயகுமார் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் மிகப்பெரிய பூகம்பம் வெடித்தது.

வனிதா-விஜயகுமார் சண்டை:

இதனால் விஜயகுமார் மற்றும் மொத்த குடும்பமே வனிதாவை ஒதுக்கி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் விஜயகுமார் குடும்பம் எந்த ஒரு நிகழ்விலும் வனிதாவை அழைப்பதில்லை. இதனால் தற்போது தியா திருமணத்திற்கு தன்னை யாரும் அழைக்காதது குறித்து வனிதா தன்னுடைய பதிவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றார். இந்த நிலையில் வனிதா-விஜயகுமார் குறித்த விடியோக்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

https://www.youtube.com/watch?v=E1waRQ3UfbY&t=7s

வனிதா பழைய பேட்டி வீடியோ:

அந்த வகையில் வனிதா தன்னுடைய தந்தை விஜயகுமார் குறித்து பேசிய பழைய வீடியோவில், என்னுடைய அப்பா பேட்டியில் என்னுடைய மகள்கள் என்று என் பெயரை சொல்லாமல் எல்லா பெயரையும் சொல்லி இருந்தார். அதை தான் படையப்பா படத்தில் நீலாம்பரி பார்ப்பது போல குறைந்தது பத்து முறையாவது பார்த்திருப்பேன். அவர் வேண்டுமெனில் என்னை பிள்ளை என்று சொல்லாமல் இருக்கலாம். ஆனால், உலகம் அப்படி சொல்லாது. நான் எப்போதும் அவருடைய பிள்ளை தான். அப்பா பேச்சைக் கேட்ட ஒரே பிள்ளை என்றால் அது நான் தான். அவரால்தான் என்னுடைய வாழ்க்கை சீரழிந்து போனது. என்னுடைய வாழ்க்கை எப்படி எப்படியோ இருந்திருக்கும். ஆனால், அவரின் பேச்சை கேட்டதால்தான் என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full