நான் பிரபுதேவாவை காதலித்தேன்,அந்த விஷயம் என் அப்பாவுக்கு தெரிந்ததும் - வனிதா சொன்ன லவ் ஸ்டோரி.

By subhashini · 8/5/2024

தான் சினிமாவிற்கு வந்ததற்கான காரணம் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் வனிதா னிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த ஆண்டு இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

வனிதா குறித்த தகவல்:

இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார்.

வனிதாவின் யூடியூப் சேனல் :

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல்  அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு வனிதா தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவர் மூன்று திருமணம் செய்த்து இருக்கிறார்.

வனிதா பேட்டி:

மூன்று திருமணமே தோல்வியில் தான் முடிந்தது. இருந்தாலும், விடாமுயற்சியுடன் வனிதா போராடி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வனிதா விஜயகுமார், நான் பிரபுதேவாவை காதலிக்கவில்லை என்றால் சினிமாவிற்கே வந்திருக்க மாட்டேன். பிரபுதேவா என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை தான் நான் காதலித்தேன். இந்த விவகாரம் என்னுடைய அப்பாவிற்கு தெரிந்து விட்டு ஐயையோ இந்த பெண் பைத்தியம் ஆகிவிட்டார் என்றெல்லாம் நினைத்தார்.

பிரபுதேவா குறித்து சொன்னது:

மேலும், கூலி படத்தில் நடித்த என்னுடைய அக்கா கவிதாவிடம் கேமரா இருந்தது. ஒருமுறை பிரபுதேவாவிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டதற்கு சரி என்று சொன்ன உடனே என்னுடைய அக்காவை எடுக்க சொன்னேன். அவரும் எடுத்தார். நான் ரொம்ப சந்தோசமாக இருந்தேன். இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. அதனால் புகைப்படத்தை பார்க்க ரொம்ப ஆர்வம். பின் காலையில் புகைப்படத்தை பார்த்து நான் ரொம்பவே அதிர்ச்சியாகி விட்டேன். அதில் நான் மட்டும் தான் இருக்கிறேன். பிரபு தேவா தலையே இல்லை என்று கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full