பிக் பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. இதனால் வனிதாவை பற்றிய பல்வேறு விஷயங்களை நெட்டிசன்கள் தோண்டி எடுத்துக்கொண்டு வருகின்றனர். வனிதா தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

மேலும், பிரபல நடிகரான அருண் விஜய்யின் சகோதரி என்பதும் அறிந்த விஷயம் தான். இப்படி இருக்க வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார். ஆனால், வனிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

மேலும், பல ஆண்டுகளாக நடிகை வனிதா, குடும்பத்தினரைப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வனிதா, தனது சகோதரர் அருண் விஜய் மற்றும் சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement
Advertisement