வனிதாவின் இளைய மகளை அவர் தந்தையே அழைத்து சென்றுவிட்டாரா ? தன் மகளை சந்தித்த வனிதா. வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 31/8/2022

நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய இளைய மகளை வனிதா சந்தித்திருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் - மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இருந்தும், இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் காத்து என்ற படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

வனிதா செய்யும் வேலைகள்:

இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் வனிதாவின் இளையமகள் ஜெயனிதா வீடியோக்களிலோ அல்லது பொது இடங்களிலேயே காட்டப்பட்டதே இல்லை. இது குறித்து பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கு வனிதாவும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.

வனிதாவின் இளைய மகள்:

மேலும், இளைய மகளை அவரது தந்தை அழைத்து சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வனிதா தன்னுடைய இளைய மகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது, வனிதாவின் இளைய மகள் ஜெயனிதாவை அவருடைய தந்தை அழைத்து சென்று விட்டார். தன்னுடைய மூத்த மகள் ஜோத்விகாவுடன் தான் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். அதனால் தான் வனிதா பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஜெயனிதா காணவில்லை. தற்போது ஜெயனிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வனிதா பதிவிட்டு இருக்கிறார். அதில் பார்ப்பதற்கு ஜெயனிதா அப்படியே வனிதாவை போலவே இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full