வனிதாவின் கணவர் பீட்டர் பவுல் மருத்துவமனையின் அனுமதி ? வனிதாவின் உருக்கமான பதிவு.

By Rajkumar · 25/8/2020

வனிதாவின் மூன்றாம் கணவர் பீட்டர் பவுல் மருத்துவமனையில் அனுமபாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் தற்போது வேண்டுமானால் மீரா மிதுன் ஹாட் டாபிக்காக இருந்து வந்தாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது. கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பீட்டர் பவுலின் சர்ச்சை ஓய்ந்தது. இருப்பினும் பீட்டர் பவுலுடன் அவ்வப்போது யூடியூபில் இணைந்து வீடியோ பகிர்ந்து வந்தார் வனிதா.

இதையும் பாருங்க : vj சித்ரா திருமணம் செய்துகொள்ள போகும் நபர் இவர் தானா ? வைரலாகும் புகைப்படம்.

இந்த நிலையில் பீட்டர் பவுலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார். தனது திருமணம் முதல் சமயல் வீடியோ வரை அனைத்தையும் தனது சமூக வலைதளத்தில் அப்டேட் செய்யும் வனிதா, பீட்டர் பவுல் மருத்துவமனையில் அனுமதிப்பட்டது பற்றி எதுவும் கூறவில்லை. இதனால் வனிதாவின் ரசிகர்கள் பலரும் பீட்டருக்கு என்ன ஆச்சு என்று வணிதாவிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

https://twitter.com/vanithavijayku1/status/1298134375238791168

இப்படி ஒரு நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், , “சொல்ல நிறைய இருக்கிறது… ஒன்றும் என்னால் முடியவில்லை. கடவுள் மிகப்பெரியவர்.. நம்புங்கள்.. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது. வாழ்க்கை கடினமானதே… எதிர்கொள்ளுங்கள். எல்லாமே சரியாகும்., கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருப்பி அடியுங்கள்… இந்த உலகுக்கு உங்களால் முடிந்தால் காட்டுங்கள்…” என்று வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full