தனது தாத்தா விஜயகுமாரின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வனிதா மகன். வைரல் புகைப்படம்.

By Rajkumar · 25/7/2020

வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணம் பற்றிய செய்திகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதேபோல இவரது முதல் கணவரான ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன் ஸ்ரீஹரியால் ஏற்பட்ட பிரச்சினைகளும் ஏராளம். இந்த பிரச்சனைகளால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது.

வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று தரவிடபட்டது. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம்.

தற்போது ஸ்ரீ ஹரிக்கு 23 வயதாகிறது அவனின் நண்பர்கள் வட்டாரத்தில் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும் என்பதால் அவர் நண்பர்களிடம் நெருங்கி பழகுவது கூட குறைத்து விட்டராம். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தனது தாத்தா விஜயகுமார் பிறந்தநாளில் ஸ்ரீஹரி கலந்து கொண்டு இருந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full