என்னது, நான் மன்னிப்பு கேட்டேனே. வனிதாவுக்கு செம பல்ப் கொடுத்த நாஞ்சில் விஜயன். வீடியோ இதோ.

By Rajkumar · 5/8/2020

பிக்பாஸ் புகழ் வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி இருந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்படி பலர் வனிதாவின் திருமண சர்ச்சை குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்த சர்ச்சையில் சூர்யா தேவியால் சிக்கியவர் தான் நாஞ்சில் விஜயன். மற்றவர்களை போலவே இவரும் வனிதா குறித்து தொடர்ந்து விளாசி வந்தார்.

https://www.instagram.com/p/CDeNcKzFam5/

வனிதா மற்றும் நாஞ்சில் விஜயன் இருவரும் சமூக வலைத்தளத்தில் மாறி மாறி சர்ச்சையான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக வனிதா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து ஆரம்பம் முதல் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். அவர் எனக்கு எதிராக இருக்க எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் அவரைச் சந்தித்ததும் இல்லை, அவர் யார் என்பது எனக்கு தெரியாது. சூர்யா தேவி என்ற சதிகாரி தான் இந்த அனைத்து குழப்பத்திற்கும் காரணம். வழக்கம்போல கஸ்தூரி இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக ஆக்கியுள்ளார்.

அவருக்கு என் மீது கோபம் வரக் காரணம் சம்பந்தமே இல்லாமல் அவர் மீது நான் சொன்ன குற்றச்சாட்டுகள் தான். நான் அவரின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன்.என்னை பற்றி அவர் தான் அப்படி பேச வைத்திருக்கிறார். மேலும் என்னை பற்றி மக்கள் கருத்தை கேட்டு வீடியோவை பதி விட்டதை எண்ணி நாஞ்சில் விஜயன் வருத்தப்பட்டார். என்று பதிவிட்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=-fpGJrInD1s&t=165s

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் விஜயன், வனிதாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் வனிதாவிற்கு போன் செய்தது உண்மை தான். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதை விளக்கிக் கூறத்தான் நான் போன் செய்தேன். நான் மன்னிப்பெல்லாம் கேட்டது இல்லை, கேட்கவும் மாட்டேன். நான் என்ன கொலை குற்றமா செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full