வனிதா-பீட்டர் திருமணம், காவல் ஆய்வாளார் மீது புகார் அளித்த பீட்டர் மனைவி. காரணம் இது தான்.

By Rajkumar · 5/7/2020

பிக் பாஸ் வனிதாவுக்கும், பீட்டர் பவுல் என்பவருக்கும் ஜூன் 27 திருமணம் நடைபெற்றது. வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பவுளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பது சமீபத்தில் தான் தெரியவந்துள்ளது. பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது முதல் மனைவி எலிசபெத். மேலும், தனது கணவர் பீட்டர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்து வருகிறார் பீட்டரின் மனைவி எலிசபத்.

வனிதா மற்றும் பீட்டரின் திருமண செய்தியை அறிந்த பீட்டரின் மனைவி எலிசபெத் சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து காவல் ஆய்வாளர், எலிசபெத்தின் கணவர் பீட்டர் விசாரித்துள்ளார். அப்போது தனது முதல் மனைவியான எலிசபெத்தை விவாகரத்து செய்துவிட்டு தான் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக எழுதி கொடுத்து சென்றுள்ளார் பீட்டர். இதையடுத்து அடுத்த சில நாளிலேயே வனிதாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால், பீட்டரின் மனைவி எலிசபெத் தனக்கு பீட்டர் எந்தவித விவாகரத்தும் அளிக்கவில்லை என்றும் காவல்நிலையத்தில் கூறியுள்ளார். மேலும், பீட்டர் மற்றும் வனிதாவின் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக கூட காவல் ஆய்வாளரை தொடர்புகொண்டு அவர்களின் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள் என்று புகார் அளித்திருக்கிறார். எலிசபெத் கூறிய புகாரை காவல் ஆய்வாளர் அலட்சியப்படுத்தியதால் தான் தற்போது பீட்டர் மற்றும் வனிதா திருமணம்முடிந்ததாக எலிசபெத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் காவல் ஆய்வாளரின் அலட்சியப் போக்கினால் தான் வனிதா மற்றும் பீட்டர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், எனவே காவல் ஆய்வாளர்வணிதாவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதனால் இந்த வழக்கில் அவரை மாற்றி முறையாக விசாரிக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் பீட்டரின் மனைவி எலிசபெத் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full