தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 82 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொன்டு இருக்கின்றனர். அந்த வகையில் விசித்ராவும் ஒருவர். தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கௌண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களின் படங்களில் பெண் காமெடியன்களாக நடித்து பிரபமானவர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர்.ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அதிலும் சத்தியராஜ் இயக்கி நடித்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் இவர் மினிஸ்டர் அம்சவள்ளியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அதன் பின்னர் இவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நடிகை விசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு என்று மிக மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த விசித்ரா.எனது திறமையின் மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

Advertisement

அவர், இயக்குநராக அவதாரமெடுத்த தனது முதல் படமான வில்லாதி வில்லன் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். ஆனால் அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரேமாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது என்று பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இவர் பிக் பாஸில் இருக்கும் வெளியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement