ஐசுவின் ஆடையை காரணம் காட்டி நாமினேட் செய்த விசித்ரா - சரமாரி கேள்வி கேட்ட முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டி.

By Arun · 3/10/2023

ஐஷுவின் ஆடை குறித்து விசித்ரா சொன்ன கருத்து சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்து சனம் ஷெட்டி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல சினிமா பிரபலங்கள் கூட கலந்துகொண்டு இருகின்றனர். அந்த வகையில் விசித்ராவும் ஒருவர். ஆரம்ப காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதாநாயகியாகவும், வில்லி ரோல்களிலும் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன், சூப்பர் ஸ்டார் நடித்த முத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் சத்தியராஜ் இயக்கி நடித்த 'வில்லாதி வில்லன்' படத்தில் இவர் மினிஸ்டர் அம்சவள்ளியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், அதன் பின்னர் இவருக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சி கதாபாத்திரங்கள் தான். சமீப காலமாக படங்களில் இவரை காண முடியாத நிலையில் இறுதியாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இப்படி ஒரு நிலையில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார். இவர் வந்த முதல் நாளே ஜோவிகாவிற்கு படிப்பு விஷயத்தில் கிளாஸ் எடுத்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று இவர் ஐஷுவை நாமினேட் செய்த சொன்ன காரணம் தான் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்தனர்.

அந்த வகையில் விசித்ரா அன்னயா மற்றும் ஐசுவை நாமினேட் செய்தார். அப்போது ஐசுவை நாமினேட் செய்த காரணம் குறித்து சொன்ன விசித்ரா ' ஐசு அவருடைய ஸ்டைல் மேக்கப் சென்ஸ் மற்றும் உட்காரம் விதம் டிரெஸ்ஸிங் இதெல்லாம் சரியில்லை இங்கே சின்ன வயது பையனும் இருக்கிறார்கள் பெரியவர்களும் இருக்கிறார்கள் எனவே அது கொஞ்சம் அவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

ரஷிதாவின் இந்த பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதிலும் சிலர் கூகுள்ல கூட உங்க பழைய போட்டோ ரொம்ப இருக்கு என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் போட்டியாளரான சனம் ' நீங்க கண்ண மூடிக்கிட்டு உங்க வீட்டுக்கே போய்டுங்க. என்ன Nonsense இது? ஒடுக்கு முறையில் இருந்து வெளியில் வரும் பெண்களை தடுக்க நினைப்பதா ? இவர் எல்லாம் எப்படி சைக்காலஜி பட்டம் பெற்றார் என்பதை நம்ப முடியவில்லை' என்று பதிவிட்டுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full