அவன் நல்ல மகனா இருக்கலாம், நல்ல நண்பனா இருக்கலாம், ஆனா என்ன பொறுத்தவரை அவன் - மீண்டும் தினேஷ் குறித்து மோசமாக பேசிய விசித்ரா.

By Rajkumar · 1/1/2024

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம் ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

https://twitter.com/maxinfo360/status/1740617586717728824?s=48&t=J5JJGwG2CyyWVnb98OYMRw

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் ரவீனா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி செல்வதால் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் சுவாரசியம் இல்லாமல் நடந்த இந்த டாஸ்கில் விஷ்ணு வெற்றி பெற்று Ticket To Finaleவை வென்று இருந்தார்.

இந்த டாஸ்கின் இடையில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் தான் அடிக்கடி முட்டிக்கொண்டது. கடந்த சில வாரங்களாகவே விசித்ரா மற்றும் தினேஷ் ஆகிய இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் சென்று கொண்டு இருக்கிறது. ஆரம்பத்தில் விசித்ரா, தினேஷ் மற்றும் அர்ச்சனாவின் பக்கம் தான் இருந்தார். ஆனால், கடந்த சில வாரங்களாக மாயா மற்றும் பூர்ணிமா கேங்கில் சேர்ந்துவிட்டார். இதனால் அடிக்கடி தினேஷ் பற்றி தொடர்ந்து குறை சொல்லி வருகிறார் விசித்ரா.

https://twitter.com/suriya_fan_d/status/1741522180104667428?s=48

அந்த வகையில் சமீபத்தில் தினேஷ் குறித்து பேசிய விசித்ரா 'சில மூஞ்சிகளை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த வெறுப்பு போகவே மாட்டேங்குது. இது எல்லாம் இருந்தென்ன பிரயோஜனம் வாழ்ந்து என்ன பிரயோஜனம். இப்படிப்பட்ட ஆளுடன் எப்படி குடும்பம் நடத்துவார்கள், விட்டுட்டு ஓட வேண்டியது தான். ஒரு மூன்று மாதம் இவர்களுடன் குடித்தனம் பண்ண முடியவில்லை.

இவருடன் எல்லாம் எப்படி ஒருவர் குடித்தனம் நடத்துவார், திரும்பி கிரும்பி வந்திடாதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கையை நடத்து. இவனுடயெல்லாம் வாழ்வதற்கு நீ தனியாகவே இருந்து விடலாம்' என்று பேசி இருந்தார். விசித்ராவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல், விசித்ராவிடம் கேட்டு இருந்தார். ஆரம்பத்தில் இதற்க்கு மழுப்பிய விசித்ரா பின்னர் ஆமாம் சார் தப்பு தான் என்று ஒப்புக்கொண்டார்.

https://twitter.com/inshafinzz/status/1741504452014866927?s=48

ஆனாலும் கமல் புத்தி சொல்லியும் மீண்டும் தினேஷ் குறித்து பேசி இருக்கும் விசித்ரா ' அவன் எப்பேர்ப்பட்ட நல்லவனா இருந்தாலும் அவன் என்னை பொறுத்த வரை கெட்டவன் தான். அவன் நல்ல மகனா இருக்கலாம், நல்ல நண்பனாக இருக்காமல் ஆனால், அவன் நல்ல கணவர் இல்லை. மிகவும் மோசமான நபர், அவனை எனக்கு சுத்தமாக புடிக்கவில்லை என்று மீண்டும் தினேஷ் குறித்து மோசமாக பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full