பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 52 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ்.

அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். அதில் விசித்திரா, என் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்தது தான். தெலுங்கில் பிரபலமான முன்னாடி நடிகர். அவருடைய ஒரு படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் சூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தேன். அங்குதான் நான் என்னுடைய வருங்கால கணவரை சந்தித்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக இருந்தார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்திரா:

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ முதல் ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை என பலருமே என்னை தொல்லை செய்தார்கள். தினமும் இரவு என் அறையின் கதவைத் தட்டி டார்ச்சர் செய்தார்கள். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பயத்திலிருந்தேன். என்னுடைய வருங்கால கணவர் தான் உதவி செய்தார். அப்படி இருக்கும்போது ஒரு நாள் படப்பிடிப்பில் ஒருவர் என்னை தவறான இடத்தில் தவறான நோக்கத்தில் கை வைத்தார். இது குறித்து நான் ஸ்டண்ட் மாஸ்டர் இடம் சொன்னபோது அவர் என்னை தான் அடித்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர்கள் என யாருமே தட்டிக் கேட்கவில்லை.

விசித்திரா கணவர் பேட்டி:

இதனால் தான் நான் சினிமாவில் இருந்து விலகி விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருந்தார். இப்படி இவர் கூறியிருந்தது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. மேலும், விசித்ரா நடித்தது பாலகிருஷ்ணா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு பாலேவடிவி பாசு என்ற படத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது. இது குறித்து அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து பலரும் விசித்திராவுக்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

மனம் உடைந்த மகன்:

இந்நிலையில் இது குறித்து விசித்ராவின் கணவர் கூறியிருப்பது, விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார். அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான். இந்த டாபிக் பற்றி பேசினாலே அவர் ரொம்ப லோ ஆகி விடுவார். திருமணத்திற்கு பிறகு இப்போது தான் இதைப் பற்றி பேசி இருக்கிறார். என் பெரிய மகன் வந்து இது போன்ற பிரச்சனை இருந்ததா? என்று கேட்கிறான். அவனுக்கு 21 வயதாகிறது.

Advertisement

மகன் குறித்து சொன்னது:

இப்போது வரை நாங்கள் இதை அவனிடம் சொன்னதே இல்லை. என் மகன்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. இந்த சம்பவம் ஒரு கசப்பான அனுபவம். அதை மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி இருக்கும்போது ஏன் இதை விசித்தரா சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கே பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. இதை பற்றி நாங்கள் இருவருமே பேசிக் கொண்டதில்லை. ஆனால், ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார் என்று தெரியவில்லை. என் பெரிய மகன் இதை பார்த்துவிட்டு கல்லூரிக்கு கூட போகவில்லை. மனமடைந்து விட்டான்.இனிமேல் தான் நான் அவரிடம் இதைப் பற்றி பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement