அர்ச்சனா தான் டைட்டில் ஜெயிக்கனும்னு எல்லாரும் சொல்றீங்க, ஆனா என்ன பொறுத்த வரை - வெளியில் வந்தும் வன்மம் குறையாத விசித்ரா.

By Rajkumar · 8/1/2024

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்ரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது. இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஒருவழியாக பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். மேலும், கடந்த வாரம் வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய், மாயா, மணி ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர்.

இதில் யார் வெளியேறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. அந்த வகையில் மாயா மற்றும் பூர்ணிமா தான் வாக்குகளின் பட்டியலில் பூர்ணிமா ரவி தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்தனர். ஆனால், பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இவரை அடுத்து மாயா மற்றும் விஜய் வர்மா குறைவான வாக்குகளை பெற்று இருந்தனர்.

https://twitter.com/BBTamilS07/status/1744108196837396691

எனவே மாயா அல்லது விஜய் வர்மா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் கூறுவதற்கு ஏற்ப விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விசித்ரா ' அதில் அவர், எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பேன் என்று எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.

பிக்பாஸ் என்னை வெளியே அனுப்பியது நிறைய பேர் Unfair என்று சொன்னீர்கள், அந்த அளவிற்கு நான் மக்கள் மனதில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கு. என்னை பலரும் யார் டைட்டில் ஜெயிப்பார் என கேட்கிறார்கள், பலரும் கூறுவது அர்ச்சனா தான். ஆனால் என்னை பொறுத்தவரையில் மாயா ஜெயித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

View this post on Instagram

A post shared by vichitra (@vichu_90)

தனிப்பட்ட காரணம் இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் கூறுகிறேன் என பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து விசித்ரா நன்றாக விளையாடிக் கொண்டுதான் வந்தார். ஆரம்பத்தில் இவர் அர்ச்சனாவுடன் சேர்ந்து Bully Gangஐ எதிர்த்தபோது இவருக்கு ஆதரவு கூடியது. ஆனால், கடைசி சில வாரங்களில் இவர் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் சேர்ந்து அர்ச்சனா மற்றும் தினேஷ் மீது வன்மத்தை கக்கியதே இவரது வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full