ஏற்கனவே ஒரு Yellow Card, நான் மீண்டும் பிக் பாஸ் உள்ள போனா - ரீ-என்ட்ரி குறித்து விஜய் வர்மா
மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வது குறித்து விஜய் வர்மா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 51 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம். தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பிக் பாஸ்.
பிக் பாஸ் 7:
இதனால் நிகழ்ச்சி ஆட்டம் சூடுபிடித்து இருக்கிறது. பின் உங்கள் வாழ்க்கையில் பூகம்பம் என்ற டாஸ்கை கொடுக்கிறார் பிக் பாஸ். அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பமான விஷயத்தை கூறியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் யார் வருவார்கள் என்ற ஆர்வம் ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் பெயர்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.
விஜய் வர்மா பேட்டி:
அதில் அதிகமாக விஜய் வர்மா கண்டிப்பாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு விஜய் வர்மா அளித்த பேட்டியில், பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன பேசுறது என்று தெரியாமல் கோபமாக பேசின சில வார்த்தைகள் தான் எனக்கு பின் விளைவை ஏற்படுத்தி இருக்கு. அந்த வீட்டில் பிரஷரில் பேசின விஷயங்கள் தானே தவிர மனதில் இருந்து வேணும் என்று எந்த வார்த்தையும் பேசவில்லை.
நிகழ்ச்சி குறித்து சொன்னது:
பிரதீப் இடம் வெளியில் என் நண்பர்கள் இருக்காங்க என்று சொன்னது கூட தெரியாமல் விளையாட்டாக பேசினது தான். விஷ்ணு அதை பெரிசாக்கி விட்டார். அந்த விஷயம் பெருசாகிவிட்டது. வைல்ட் கார்டு என்று மாயா என் காதில் சொன்னார்கள். பிக் பாஸ் போகிறதுக்கு முன்னாடியே மாயாவை எனக்கு தெரியும். நான் விஷ்ணு , கூல் சுரேஷ் அண்ணா தான் எப்ப பார்த்தாலும் பேசிக் கொண்டிருப்போம். மூணாவது வாரமே வெளியே போவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
பிக் பாஸ் வாய்ப்பு குறித்து சொன்னது:
அதை ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமாக இருந்தது. இப்ப வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு நிறைய சப்போர்ட் வருகிறது. எனக்கு இன்னொரு சான்ஸ் கிடைத்தால் நான் போய் கேம் சேஞ்சரான ஒரு ஆளாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இன்னொரு வாய்ப்புக்களை கண்டிப்பாக அதை சரியாக பயன்படுத்தி பேன் என்று பேசி இருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பலருமே கண்டிப்பாக விஜய் வர்மா உள்ளே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.