'இந்த பைத்தியத்துக்கு Redcard கொடுத்து அனுப்பிடுங்க' மூர்க்கமாக பிரதீப்பை தாக்கிய விஜய் வர்மாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 19/10/2023

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது வார்த்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மூன்றாம் வாரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பவா செல்லத்துரை வெளியேறியதால் அந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸில் பிஸிக்கல் டாஸ்க் ஆரம்பம் ஆகி இருக்கிறது.

https://twitter.com/devi_lalith/status/1714965395256521108

இந்த டாஸ்க் ஆரம்பம் ஆன சில நிமிடத்தில் நிக்சன் கண்ணாடி கதவை உடைத்தார். இதனால் பிரதீப் மற்றும் மாயாவிற்கு சிறு காயங்கள் கூட ஏற்பட்டது. இதனால் டாஸ்க்கை சிறிது நேரம் நிறுத்திவைத்தார் பிக் பாஸ். இதனை தொடர்ந்து மீண்டும் இந்த டாஸ்க் துவங்கியது. அப்போது அனைவரும் ஆக்ரோசமுடன் ஆடினார்கள். ஆனால், விஜய் வர்மா மற்றவர்களை கடுமையாக தாக்கி விளையாடினார். எதோஅதிலும் பிரதீப்பை WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதீப் மற்றும் விஜய் வர்மா இருவருக்கும் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. இப்படி ஒரு நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு மனஸ்தாபமுடைய போட்டியாளர்கள் பற்றி பேசினர். அப்போது விஜய் வர்மா பேசுகையில் ‘பிரதீப் என் மீது ஷூவை இடித்துவிட்டு போனார். எனக்கு திடீரென்று கோபம் வந்து நான் கையை ஓங்கினால் ‘மூக்கு வாய் எல்லாம் உடைந்துவிடும். என் மீது பாசம் பசங்க எல்லாம் வெளியில் இருக்கிறார்கள். நீ வெளியில் போனால் ஏதாவது பண்ணிவிடுவார்கள் என்று மிரட்டினார்.

https://twitter.com/itzSekar/status/1714965262414610800

உடனே விஷ்ணு ‘உன்னை நான் செருப்பால தட்டிவிட்டுட்டேன் முடித்தால் என்னை அடி என்று சொல்ல நீ செருப்பால தட்டி பாரு என்று விஜய்யும் கூறினார். இந்த விஷயம் தொடர்பாக பவா செல்லத்துரை உட்பட அனைவரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், ரசிகர்கள் கூட இப்படி அடாவடியாக மிரட்டும் தோனியில் பேசும் விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்று கூறி வந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து கமல் பேசிய போது விஜய் வர்மா இப்படி நடந்துகொண்டதற்காக அவருக்கு Yellow Card வழங்கப்படுகிறது. அவர் இதே போல இன்னும் இரண்டு முறை Yellow Card வாங்கனால் அவர் நேரடியாக இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் கூறி இருந்தார். கமல் இப்படி கூறியதில் இருந்தே விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் அடக்கி தான் வசித்து வந்தார். கடந்த வாரம் முழுக்க அவர் இருந்த இடம் தெறியாமல் தான் இருந்து வந்தார்.

https://twitter.com/Naveen_Kandha/status/1714970635762569224

இப்படி ஒரு நிலையில் இன்று நடைபெற்ற டாஸ்க்கில் விஜய் வர்மா மிகவும் கடுமையாக நடந்துகொண்டார். அதிலும் குறிப்பாக பிரதீப்பை எதோ WWFல் தூக்கி போடுவது போல தூக்கி போட்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் ஒருகணம் உறைந்து போனார்கள். ஆனால், பிரதீப் இதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் மீண்டும் விளையாட்டை தொடர்ந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது அவன் என் கழுத்தை பிடித்தான்.

https://twitter.com/VimalRemoN2/status/1714958630012039542

சரி, நீ அவ்ளோ புத்திசாளினா நானும் காட்றேன். என்னை நோண்டுனாங்க சரி நானும் ஜாலியா நோண்டுறேன் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து விஜய் வர்மாவிற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே விஜய் வர்மா ஒரு yellow card வாங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் கமல் கண்டிப்பாக அவருக்கு மேலும் ஒரு Yellow Cardஐ வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full