BB4ல் "அன்புள்ள ஆல்கஹால்" ஒளிபரப்பு செய்த விஜய் டிவி, ஏன் விக்ரமன் எழுதிய"அன்புள்ள அம்பேத்கர்" ஐ 24/7 கூட ஒளிபரப்பு செய்யவில்லை - நெட்டிசன்கள் கேள்வி.

By ·

பிக் பாஸ் சீசன்6 தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகிய நிலையில் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர் தான் விக்ரமன். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.

பிக் பாஸ் விக்ரமன் :

தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் முதல்முறையாக கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.

குரல் கொடுக்கும் விக்ரமன் :

ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல இல்லாமல் நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்து வருகிறார்.

விழிப்புணர்பு :

அந்த வகையில் ஒரு டாஸ்கில் விக்ரமன் துப்புரவு தொழிலாளிகள் படும் கஷ்டத்தை கூறும் வகையில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலையை எதிராக விழிப்புணர்வு செய்திருந்தார். மேலும் கடந்த வாரம் நடந்த பிரபலங்கள் டாக்கில் கூட தனக்கு அந்நியன் டாஸ்கில் தனக்கு இந்த படத்தின் மீது உடன்பாடில்லை. இது மற்ற மக்களை தவிர பிராமினர்கள் மட்டும் நல்லவர்கள் என்ற நோக்கில் படம் இருந்ததாக துணிச்சலாக பேசியிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் எல்லாவற்றிற்கும் குரல் கொடுப்பதினால் இவரை அரசியல் வாதி என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் விமர்ச்சித்தாலும், பிக் பாஸ் தொகுப்ப்பாளரான கமல்ஹாசன் இவருக்கு சாதகமாகவே பேசி வருகிறார்.

பதிய டாஸ்க் :

இந்த நிலையில் நேற்று போட்டியாளர்களுக்கு "கானா காணும் காலங்கள்" டாஸ்க்கானது கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் மூன்று ஆசிரியர்கள் 7 மாணவர்கள் என தனியாக பிரிந்து தொடக்கப்பள்ளி, மேல் நிலை பள்ளி, கல்லூரி என மூன்று பாகங்களாக கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த டாஸ்கிற்கிடையே போட்டியாளர்கள் தங்களுடைய கடந்த கால நினைவுகளை பகிரும் டாஸ்கானது கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அசிம் தன்னுடைய மகனை பற்றி எழுதி அழுத்த போது விக்ரமன் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

எடிட் செய்யப்பட்ட விக்ரமனின் கடிதம் :

ஆனால் விக்ரமன் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கு கடிதம் ஓன்று அந்த டாஸ்கில் எழுதியிருந்தார். ஆனால் அதனை பிக் பாஸ் குழு எடிட் செய்து இரவு 1 மணிநேர நிகழ்ச்சியில் போட்டிருந்தது. இதனால் கோவமடைந்த ரசிகர்கள் `டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் சட்ட மேதை அவர் எல்லோருடைய தலைவர். இந்த நிலையில் கமல்ஹாசன் காந்தியை பற்றி பேசும் போது மட்டும் காட்டவிட்டு, விக்ரமன் அண்ணல் அம்பேத்கர் பற்றி பேசும் போது மட்டும் ஏன் புறக்கணிப்பு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி விஜய் டீவியை டேக் செய்து விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full