அப்போ விக்ரமனும் விஜய் டிவி Product தானா - 6 ஆண்டுக்கு முன்பே அவர் ஹீரோவாக நடித்துள்ள சீரியல். அவருக்கு ஜோடி யார் பாருங்க.

By Rajkumar · 18/10/2022

விஜய் டிவியில் ஹீரோவாக நடித்து தற்போது பிக் பாஸில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் விக்ரமன் குறித்து பலரும் அறியாத சில விஷயங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் பிரமாண்டமாக தொங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 6:

அதோடு முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார். இந்த வாரம் ஜி பி முத்து தலைவர் ஆகியிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே பிக் பாஸ் குழு விஜய் டிவி பிரபலங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரும். அந்த வகையில் விக்ரமனும் விஜய் டிவி பிரபலம் தான் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=4wYMTD0vCo8

விக்ரமன் குறித்த தகவல்:

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியலை சுந்தர் கே விஜயன் இயக்கியிருந்தார். நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்திருந்தது. இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டது.

விசிக மாநில செய்தி வாசிப்பாளர்:

இந்த சீரியலில் விக்ரமனுடன் மதுமிலா நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.இந்த சீரியல் வெறும் 29 எபிசோடுகள் மட்டும்மே ஒளிபரப்பானது. பின் இடையில் சீரியல் டிஆர்பி ரேட்டிங் குறைந்ததால் இந்த சீரியலை விரைவிலேயே நிறுத்திவிட்டனர். அதற்குப் பிறகு விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கி இருந்தார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=PRo8nYUGAas

பிக் பாஸ் வீட்டில் விக்ரமன்:

பிக் பாஸ் வீட்டில் பெரிதாக இவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் செய்தி ஊடகங்களில் நடப்பது போல நிதானமாக யோசிக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் விக்ரமனை விமர்சித்து இருந்தார்கள். இனி வரும் நாட்களில் விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் நீண்ட நாள் நீடித்திருப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full