சேனல் அழைத்தும் கடைசி நேரத்தில் Wild Cardஆக உள்ளே செல்ல மறுத்த வினுஷா. இதான் காரணமாம்

By Dhilip Kumar · 28/11/2023

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 58 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

https://twitter.com/Filmophile_Man/status/1715675474532388884

கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் 14 பேர் பிக் பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார் பிக் பாஸ். பின் மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது.

பூகம்பம் டாஸ்க்:

அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரின் வருகையில் டபுள் ஏவிக்ஷன் ஏற்பட்டது. இதில் பிராவோ மற்றும் அக்ஷ்யா வெளியேறினார்கள். இவர்களை அடுத்து மூன்றாவதாக வினுஷா வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே வருவார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல தயக்கம் காட்டுவதாக பலரும் கூறுகிறார்கள்.

https://twitter.com/Filmophile_Man/status/1722258994436436472

வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்த தகவல்:

மேலும், வினுஷா நிகழ்ச்சிக்குள் போகவில்லை என்றால் அவருக்கு பதில் யுகேந்திரன் வரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், யுகேந்திரனும் நிகழ்ச்சிக்குள் செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தொடர்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி வட்டாரத்தில் கூறியிருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சி சிலருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை தந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஓவியாவை சொல்லலாம். ஆனால், சிலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி, ஏன்டா நிகழ்ச்சிக்கு வந்தோம் அளவிற்கு பெயரை கெடுத்து விட்டிருக்கிறது.

இதில் இரண்டாவது ரகம் தான் வினுஷா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை, உள்ளே ஒண்ணுமே பண்ணல. எதுவும் செய்ய மாட்டீர்களா என்றெல்லாம் பேசி இருந்தார்கள். எவிக்சன் ஆனபோது கூட இவரை சேனலே கலாய்த்தது. இது ரொம்பவே வினுஷாவை காயப்படுத்தி இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு நிக்சன் உருவகிளி செய்து இருந்தது வினுஷாவை அதிகமாக காயப்படுத்தி இருக்கிறது. பின் வெளியில் வந்த பிறகு பழைய எபிசோடுகளை பார்த்த பிறகு வினுஷா அப்செட் ஆகிட்டார்.

View this post on Instagram

A post shared by Vinusha Devi (@vinusha_devi)

வினுஷா-யுகேந்திரன் குறித்து சொன்னது:

இதனால் தான் இவர் மறுபடியும் வைல்ட் கார்ட் வாய்ப்பு மறுக்கிறார். பின் சேனல் யுகேந்திரனை அனுப்பலாமா என்று கேட்டபோது அவரும் வாய்ப்பை மறுத்திருக்கிறார். சொல்லப்போனால், யுகேந்திரன் முதல் வாரத்திலேயே வெளியே சென்று இருக்க வேண்டியது, ஆனால், வெளிநாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்தவரை உடனே வெளியில் அனுப்பலாமா என்று அவருக்காக ஸ்ட்ராங் ரெக்கமண்டேஷன் செய்ததாக சிலர் சொல்கிறார்கள். ஆனால், அவரோ பிரதிப் வெளியேறிய போது அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டார். அதனால் தான் அவர் நிகழ்ச்சிக்குள் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆக மொத்தம் இதில் யார் வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இரண்டு பேர் மட்டுமே வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது ஒரு நபர் வருவாரா? என்பது தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full