உனக்கு இங்க எல்லாரும் எலக்கரமாதா இருக்கு - ஒருமையில் பேசிய ஜோவிகாவை வெளுத்து வாங்கிய விஷணு. வைரலாகும் வீடியோ.

By Arun · 15/10/2023

அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் கலந்துகொண்டனர்.

https://twitter.com/Reyas_Cena25/status/1712746364952842664

இதில் முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்தே நாளே பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். ஆரம்பத்தில் இருந்தே இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.அதிலும் விசித்திராவுடன் இவருக்கு படிப்பு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விசித்ராவை நீ,வா என்று ஒருமையில் பேசி இருந்ததார். அதே போல பிக் பாஸ் வீடு இம்முறை இரண்டு வீடுகளாக பிரிந்து இருக்கிறது. ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை சமைக்க வேண்டும் என்ற ரூலும் இருக்கிறது. இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினுள் விஜய் வர்மா, கூல் சுரேஷ், பிரதீப், அக்ஷயா, விஷ்ணு, மாயா ஆகியோர்இருந்தனர்.

https://twitter.com/thalaasar/status/1713242151948308962?s=48

ஸ்மால் பாஸ் வீட்டில் சென்றதில் இருந்தே இவர்கள் அனைவரும் பிக் பாஸ் நபர்களுடன் சண்டையிட்டு வந்தனர். அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் கொடுக்கும் மெனுவை தான் இவர்கள் சமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்களால் ஆளாளுக்கு தனி தனியாக சமைக்க முடியாது, நாங்கள் சமைத்து மட்டும் தான் போட வேண்டும் ருசியாக சமைக்க வேண்டும், கிச்சனை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரூல் எல்லாம் கிடையாது என்று பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ரைக் செய்து சமைக்காமல் இருந்தனர்.

இதனால் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டார் இடையில் பெரும் சண்டை வெடித்து இருந்தது . அதுவும் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் சமையல் செய்ய மாட்டேன் என்று பிரதீப் வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார். கடுப்பான ஜோவிகா சமையல் செய்வது தான் உன் வேலை,நாங்க சொன்னா அத நீ செஞ்சி தாண்டா ஆகனும் மூடிட்டு பண்ணு என்று வயது வித்யாசம் பார்க்காமல் பேசி இருந்தார்.

https://twitter.com/vakugu/status/1713263855185616898

ஆனால், ஜோவிகா அப்படி பேசியதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு ஏன் சம்மந்தப்பட்ட பிரதீப் கூட எதையும் கேட்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் விஷ்ணு, ஜோவிகாவிற்கு சுயபுத்தி இல்லாதவர் என்று பட்டத்தை கொடுத்தார். கமல் முடித்த பின்னர் விஷ்ணுவிடம் பேசிய ஜோவிகா ' என்னை எப்படி சுயபுத்தி இல்லாதவர் என்று சொல்லலாம். அர்த்தம் இல்லாமல் எனக்கு டைட்டிலை கொடுக்குறேன்' என்று கேட்டார்.

https://twitter.com/itzSekar/status/1713243677391458553

உடனே கடுப்பான விஷ்னு 'உனக்கு பேசவே தெரியாது உனக்கு ஜாக்கி தான் போடத் தெரியும் ஆனால் மற்றவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பது உனக்குத் தெரியாது நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா வாடா போடாங்குற. மற்றவர்களுக்கு எல்லை வேண்டும் என்று நீ சொல்ற ஆனால் உனக்கு எந்த எல்லையும் கிடையாது. இவன் அவன் என்கிற நான் உன்னை அப்படித்தான் வாடி போடி என்று சொல்கிறேனா' என்று வெளுத்து வாங்கியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full