அந்த நிகழ்ச்சி பார்மேட் இப்படி தான் - எவிக்ஷனுக்கு பிறகு விஜே பார்வதி வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருந்தார்கள்.
ரெட் கார்ட்:
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் எவிக்ஷனுக்கு பிறகு விஜே பார்வதி வெளியிட்ட வீடியோவில், நாம் பேச வேண்டும், பெர்ஃபார்ம் பண்ண வேண்டும் என்றால் ஒரு ஸ்பேஸ் இருக்காது. எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி செட் ஆகவில்லை. முதலில் ஒரு காம்பிடிஷன் இருக்கும் இடத்தில் உங்களுடைய திறமையை நீங்கள் நிரூபித்து தான் ஆக வேண்டும். நீங்கள் சமமாக போட்டி போட்டு பேச வேண்டும். அப்போதுதான் உங்க திறமையை நீங்கள் காட்ட முடியும்.
https://www.youtube.com/watch?app=desktop&v=1r5kQjDcYB8
பார்வதி வீடியோ:
நிறைய பேரை அவமானப்படுத்தும் விதமாக அந்த நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. அது அந்த டெலிவிஷன் பார்மட். ஒரு சோவில் யார் யார் வெளியே தெரிய வேண்டும் என்பதை ஒரு சில நபர்கள் சேர்ந்து முடிவு செய்தார்கள் என்றால் அங்கு ஜனநாயகம் இல்லை. எனக்கு ஜாலியாக காமெடி பண்ணிட்டு எல்லாம் இருக்க தெரியாது. அதனால்தான் நமக்கு ரியாலிட்டி நிகழ்ச்சி செட்டாகவில்லை. என்னுடைய வீட்டில் உண்மையை பேச வேண்டும். தைரியமாக பேச வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இப்படி பார்வதி பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து டெட்டிசன்கள் பலருமே விமர்சித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.