பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இப்போ சீசன் 9-ல் போட்டியாளரா? யாருன்னு நீங்களே பாருங்க

By subhashini · 5/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 31 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.

பிக் பாஸ் 9:

இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களைப் பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அதிலும் விஜே பார்வதி முகத்திரையை கிழித்திருக்கிறார்கள். ஐந்தாவது வாரத்தினுடைய கேப்டனாக திவ்யா கணேசன் தான் வெற்றி பெற்றிருந்தார். பின் ஐந்தாவது வாரத்திற்கான நாமினேஷனில் வினோத், பிரவீன், கம்ருதீன், ரம்யா, fj ,சபரி, வியானா, கெமி, விக்ரம், பார்வதி, துஷார், திவாகர் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த வாரம் ஆஹா ஓட்டல் என்ற டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, மஞ்சரி, தீபக் தான் சிறப்பு விருந்தினராக இந்த டாஸ்கில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்த ஒருவர் தான் தற்போது சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அந்த முகம் தெரியாத நபருடைய குரல் தான் அனைவருக்குமே ஞாபகத்துக்கு வரும். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குரல் கொடுப்பவர் யார் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை என்றாலும் சாஷோ என்பது தான் எல்லோருமே சொல்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்தவர்:

அப்படித்தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுத்த ஒருவர் தற்போது பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை, அமித் பார்கவ் தான். இவர் தான் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அமித் பார்கவ் சின்னத்திரை சீரியல் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய் டிவியில் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பின்பு இவர் நிறைய தொடர்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார். இவர் இறுதி வரை நீடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full