பிக் பாஸின் அச்சாணியாக இருக்கும் பிக் பாஸ் குரலின் சொந்தக்காரர் - அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

By Siva · 16/10/2022

பிக் பாஸ்க்கு குரல் கொடுத்தவரும் அவருக்கான சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் தான். இதுவரை இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன்களை கடந்து இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஆறு நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். மேலும், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6:

இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் சர்ச்சை தொடங்கியது. அதுமட்டும் இல்லாமல் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை. வீட்டில் உள்ள போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரித்து வேலைகள் பிரித்து செய்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, முதல் சீசன் ஆரம்பித்ததிலிருந்தே பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் குறித்த கேள்வி அனைவரும் மனதிலிமே எழுந்தது.

பிக் பாஸ்க்கு குரல் கொடுத்தவர்

மேலும், பிரபலங்கள் கூட பிக் பாஸ்க்கு குரல் கொடுத்தவர் யார்? என்று தேடிக் கொண்டிருந்தார்கள். பலரும் நீயா நானா கோபிநாத், சீரியல் நடிகர்கள் யாராவது இருக்குமா? என்றெல்லாம் கூறி இருந்தார்கள். அதிலும் சிலர் கமலஹாசனே பிக் பாஸ்க்கு குரல் கொடுத்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸிற்கு குரல் கொடுத்தவரும் அவருக்கான சம்பளமும் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸின் குரலாக பிரதிபலிப்பது வேறு யாருமில்லை சாஷோ.

சாஷோ குறித்த தகவல்:

இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். ஆனால், இவர் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் வெறும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் மட்டும் கிடையாது. பாலிவுட்டில் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். மஞ்சுநாத் என்ற படத்தில் ஹீரோவாக தான் இவர் தன்னுடைய கேரியறை தொடங்கினாராம். அதனை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குரல் கொடுப்பவரும் இவர்தான். கடந்த ஐந்தாவது சீசன் வரை இவருக்கு மாதம் ஒன்றிற்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பளமாக தரப்பட்டது.

சாஷோ வாங்கும் சம்பளம்:

இந்த சீசனில் ஒரு லட்சம் ரூபாய் உயர்த்தி மாதம் 6 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வாய்ஸ் கொடுப்பதற்கு அதிகம் சம்பளம் வாங்கிய முதல் நபர் என்ற பெருமையும் சாஷோ பெற்று இருக்கிறார். 64 கேமராக்களையும், 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் வீட்டுக்குள் நடக்கும் சண்டைகளையும், சச்சரிகளையும் பொறுத்துக் கொண்டு பஞ்சாயத்து செய்து வைப்பவருக்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பது மிகையாகாது தான். அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் கமல் உடைய சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. காரணம், விக்ரம் படம் செய்த வசூல் தான்.

behindtalkies AMP · Quick view
View full