ஆறாவது வாரத்தில் வெளியேறிய வாட்டர்மிலான் திவாகருக்கு பிக் பாஸ் அள்ளி கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By subhashini · 16/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 42 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், வைல்ட் கார்ட்டில் நான்கு போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் சென்றிருக்கிறார்கள். சீரியல் நடிகை திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள்.

பிக் பாஸ் 9:

இவர்கள் வீட்டுக்குள் சென்ற உடனே சரவெடியாக வெடித்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. கடந்த வாரம் ஆஹா ஓட்டல் என்ற டாஸ்க் சென்றது. இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, மஞ்சரி, தீபக் தான் சிறப்பு விருந்தினராக இந்த டாஸ்கில் கலந்து கொண்டு இருந்தார்கள். பின் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் முதலில் துஷார் தான் வெளியே போனார். இதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக பிரவீன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் ஆறாவது வாரத்தில் மன்னர் ஆட்சி டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆறாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில், கனி, திவாகர், சாண்ட்ரா, திவ்யா, பார்வதி, வியானா, fj, அரோரா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது. இதில் கனி, சுபிக்ஷா, திவாகர், ரம்யா தான் குறைவான வாக்குகளை பெற்று வந்திந்தார்கள். இதில் இந்த வாரம் கனி வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத வகையில் திவாகர் தான் இந்த வாரம் வெளியேறினார்.

திவாகர் சம்பளம்:

பெண்கள் விஷயங்களில் அத்துமீறுதல், ஜாதி ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்தியதால் தான் திவாகர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திவாகர் வாங்கி இருக்கும் சம்பளம் குறித்து விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க ஒரு நாளைக்கு 12000 ரூபாய் என்று கூறப்பட்டது. அதன்படி இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டுக்குள் 40 நாட்கள் இருந்துள்ளார். ஆகவே இவருக்கு மொத்தமாக பிக் பாஸில் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full