விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்களாகவும் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக திகழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இரண்டாவது சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான்.

கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் நீச்சல் சொல்லித் தரும் பயிற்சியாளராக ஒரு சிறுகதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் துருவங்கள் 16 படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மாபெரும் பெயரையும் புகழையும் ஏற்படுத்தி தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் தான். கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை யாஷிகா சென்றுவிட்டது.

இதையும் பாருங்க : சினிமாவில் துணை நடிகையாக தலை காண்பித்து வந்த அனிதா சம்பத் இப்போ இதில் நடிக்க போகிறார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எக்கச்சக்க படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த இளம் வயதில் கவர்ச்சிக்கு சற்றும் தயக்கம் காட்டாமல் நடித்துவருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இருந்த உடல் அமைப்பை விட தற்போது யாஷீகா தனது உடலை படு ஸ்லிம்மாக மாற்றியிருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி தவறாமல் உடற்பயிற்சிகளை செய்து வருவதால் தான்.

Advertisement

அதே போல அடிக்கடி உடற்பயிற்சி செய்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் யாஷிகா சமீபத்தில் ஆண்களுக்கு நிகராக வெயிட் லிப்டிங் செய்து பலரையும் ஆச்சரியத்தில் இருக்கிறார். மேலும், அந்த வீடியோவில் உங்களால் தூக்க முடியுமா என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நடிகை யாஷிகா மகத் நடித்து வரும் இவன்தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதே போல நடித்து வரும் ராஜபீமா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்

Advertisement

Advertisement