கனவு நினைவானது, வாழ்நாள் முழுதும் அஜித் ரசிகை- யாஷிகா போட்ட ட்வீட்.

By Rajkumar · 25/4/2020

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

https://twitter.com/iamyashikaanand/status/1253685666417750016

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பை மிக ரகசியமாக நடித்தி வருகிறார் இயக்குனர். இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் வரப்போகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதையும் பாருங்க : வி ஐ பி படத்திற்கு முன்பாகவே விக்னேஷ் சிவனை இந்த படத்தில் நோட் செய்துள்ளீர்களா. அதுவும் ஹீரோ நண்பனாக.

தல அஜித்தின் பிறந்த நாள் அன்று ரசிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு கமெண்டுகளும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தல அஜித்தின் பிறந்த நாளை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு சோசியல் மீடியாவில் தல பிறந்தநாளன்று புதியதாக ஹாஸ்டேக் உருவாக்கி பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.

இந்நிலையில் இந்த வருடம் கொரோனா வைரஸின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தல அஜித்தின் பிறந்த நாள் கொண்டாடுவது கொஞ்சம் கஷ்டம் தான். இதனால் ரசிகர்கள் எல்லாம் வருத்தத்தில் உள்ளார்கள். மேலும், தல அஜித்தின் பிறந்த நாளை 14 சினிமா பிரபலங்கள் சேர்ந்து the common DP (Display Picture) பதிவிட்டு தல பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

https://twitter.com/iamyashikaanand/status/1132652273425772545

அந்த 14 சினிமா பிரபலங்கள் அருண் விஜய், ஹன்சிகா மோத்வானி, தாமன், பிரியா ஆனந்த், யாஷிகா ஆனந்த், சாந்தனு, ராகுல்தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி அமரன், ரைசா வில்சன், நிதி அகர்வால், ஆதவ் கண்ணடாசன், ஆர்த்தி கணேஷ் ஆவார். அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் தல அஜித் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெறிவிக்கும் வகையில் Dream come true என்ற தலைப்பில் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : Sms படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பொண்ணா இது. கடற்கரையில் படு நீச்சல் உடையில் கொடுத்த போஸை பாருங்க.

தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் தான் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள் டுவிட்டரில் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்து உள்ளார். அதில் ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் இடம் நீங்கள் தல அஜித்துடன் சேர்ந்து எப்போது படம் நடிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு யாஷிகா ஆனந்த் கூறியது, நீங்கள் தல அஜித் இடம் போய் சொல்லுங்கள். நானும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full