ecr ரைட் - கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்த கார், ஒருவர் பலி படுகாயங்களுடன் யாஷிகா மருத்துவமனையில் அனுமதி.
சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் துருவங்கள் 16, கவலை வேண்டாம் போன்ற படங்களில் நடித்த யாஷிகா, பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன் பின்னர் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=lF26KaObK1M&t=29s
இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் இவர் படு காயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி நடிகை யாஷிகா காரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பல்லத்தில் விழந்து உள்ளது.
இந்த விபத்தில் யாஷிகாவுடன் பயணதித்த அவரின் தோழி வள்ளி செட்டி பவனி என்ற 28 வயது பெண் உயிரிழந்துள்ளார். மேலும், படு காயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாஷிகா இது போன்ற விபத்தில் சிக்கியது முதல் முறையல்ல, ஏற்கனவே நடிகை யாஷிகா குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்து இருந்தார் என்று கூட செய்திகள் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் மீது வந்த வேகத்தில் கார் மோதியுள்ளது.
https://www.youtube.com/watch?v=mn22tqe0c5M
இதில், அவர் படுகாயமடைந்தார்.காரில் பயணம் செய்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்பட்டது. மேலும், அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும்விபத்து நடந்ததையடுத்து அவர் காரிலிருந்து இறங்கி, வேறு வாகனத்தில் ஏறி சம்பவ இடத்திலிருந்து சென்றுவிட்டார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தியை மறுத்த யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும் என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் அங்கே சென்றதாவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.