விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று தன்னை காப்பற்றியவர்களுக்கு யாஷிகா என்ன கொடுத்துள்ளார் பாருங்க. (வீடியோ இதோ)

By Rajkumar · 14/12/2021

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டது.

https://www.youtube.com/watch?v=QiOqPzEDmkI&t=129s

அதே போல தன் உடல் நிலை குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது என்று கூறி இருந்தார்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ள யாஷிகா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வரும் யாஷிகா அடிக்கடி தண்னுடைய உடல் நிலை குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுவந்தார். சமீபத்தில் நடத்த ஒரு கடை நிகழ்ச்சிக்கு கையில் வால்கிங் ஸ்டிக்குடம் நடந்து வந்தார்.

https://www.youtube.com/watch?v=gylyI1w4tFk

இந்த நிலையில் தனக்கு விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று சந்தித்து விபத்தின் போது என்ன நடந்தது என்பதை பற்றி பேசிஇருக்கிறார் . மேலும், தான் விபத்தில் சிக்கிய போது தன்னை காப்பாற்றி ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பியவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்துள்ளார் யாஷிகா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full