Drink&Drive வழக்கு என்ன ஆச்சு, தோழிய கொன்றது எப்படி Feel பண்றீங்க - காயப்படுத்தும்படி ரசிகர் கேட்ட கேள்வி. பதில் கூறிவிட்டு பதிவை நீக்கிய யாஷிகா.

By Rajkumar · 31/3/2022

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

கார் விபத்தில் இறந்த தோழி :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

உடல் நிலை தேறி வரும் யாஷிகா :

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. விபத்தில் இருந்து மீண்டாலும் தன்னால் தான் தன் தோழி இறந்தார் என்று குற்ற உணர்வில் இருந்து வருகிறார் யாஷிகா. தற்போது உடல் நலம் தேறி வரும் யாஷிகா அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். பிக் பாஸ் சீசன் 5வில் கூட சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார் யாஷிகா.

ரசிகர் கேட்ட கேள்வி :

அடிக்கடி தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் 'நீங்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு என்ன நிலையில் இருக்கிறது. உங்கள் தோழியை கொன்ற பின் இப்போ எப்படி உணருகிறீர்கள் என்று காயப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டு இருந்தார்.

பதில் கூறிவிட்டு நீக்கிய யாஷிகா :

இதற்கு பதில் அளித்த யாஷிகா 'அது குடித்துவிட்டு ஏற்பட்ட விபத்து இல்லை, நான் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். நான் குடிக்கவில்லை என்று Report கூட வந்துவிட்டது. சரியான தகவல் இல்லாமல் எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம். இந்த எலும்பு முறிவு எல்லாம் ஏற்படாமல் நான் போய் சேர்ந்து இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்த பதிவை தற்போது நீக்கி இருக்கிறார் யாஷிகா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full