பாலாஜியை தொடர்ந்து இரண்டாவதாக வெளியேறிய போட்டியாளர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

By Ajju · 22/9/2018
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெரும் நபர் யார் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். ஜனனி நேரடியாக இறுதி போட்டிக்கும் தகுதிபெற்ற நிலையில் மீதமுள்ள ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோரில் யார் வெளியேற போகிறார்கள் என்ற அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த வாரம் இரண்டு நபர்கள் வெளியேற்றபடுவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பற்றபட்டுவிட்டார் என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் முதல் பாதியில் பாலாஜி எலிமினேட் செய்யப்பட்டுளதாக தகவல்கள் வெளியானது. . இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருப்பவர்களிடம் இருந்து வந்த தகவலின்படி இன்று பாலாஜி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருந்ததால் தற்போது இரண்டாம் போட்டியாளராக ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகா வெளியேற்றபட்டுள்ளதாக நம்பகரதனமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் நடந்த வாக்களிப்பில் யாஷிகாவிற்கும், விஜிக்கும் தான் அதிக போட்டி நிலவி வந்தது. இதில் யாஷிகா, விஜலட்சுமியை விட குறைவான வாக்குகள் பெற்று நிகழ்ச்சியில் வெளியேற்றபட்டுள்ளார். இந்த வாரம் இரண்டு எலிமினேஷன் என்பதால் இன்று(சனிக்கிழமை) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் பாலாஜியின் எலிமினேஷபினும், நாளை யாஷிகாவின் எலிமினேஷன் அறிவிப்பையும் கமல் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full