என்னை நிர்வாணமாக பார்த்தது அவர் தான் - ரசிகரின் ஏடாகுட கேள்விக்கு பதில் அளித்த யாஷிகா

By Rajkumar · 10/3/2022

தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.

யாஷிகாவிற்கு ஏற்பட்ட விபத்து :

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தில் வள்ளி ஷெட்டி பவானி என்ற பெண் பலியானார். மேலும், யாஷிகா மீதும் வழக்கு பதியப்பட்டு இருந்தது.

விபத்திற்கு பின் யாஷிகா :

இந்த விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு பல எலும்புகள் முறிந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தன் உடல் நலம் குறித்து பதிவிட்ட யாஷிகா, இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தால் குற்ற உணர்ச்சிக்கு உள்ளானார் யாஷிகா. மேலும், விபத்திற்கு பின்னர் யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் வாழ்க்கை முழுதும் தன் தோழியை கொன்ற குற்ற உணர்வுடன் தான் இருப்பேன் என்றும் கூறி இருந்தார்.

மீண்டும் கவர்ச்சியை வீசும் யாஷிகா :

கிட்டதட்ட 4, 5 மாதங்கள் படுக்கையில் இருந்த யாஷிகா சமீபத்தில் தான் உடல் நலம் தேறி வந்து எழுந்து நடக்கவே ஆரம்பித்தார். விபத்திற்கு பின் குணமாகி இருக்கும் யாஷிகா, தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தான் கூட பிக் பாஸ் வீட்டிற்கு சென்று போட்டியாளர்களை உற்சாகபடுத்திவிட்டு வந்தார் யாஷிகா. அதே போல சமூக வலைதளத்தில் பழையபடி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

பதிலடி கொடுத்த யாஷிகா :

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அடிக்கடி தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் லைவ் சாட்டில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த போது நெட்டிசன் ஒருவர், உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்தது யார் என்று ஏடாகுடமாக கேள்வி கேட்டதற்கு, டாக்டர் என்று தான் நினைக்கிறேன் என்று பதில் கொடுத்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full