என்னது 90ஸ் ரசிகர்கள் ரசித்த பல பாடல்கள் யுகேந்திரன் படியாதா ? ஆனால், பெயர் கூட வராத காரணம் இதுதான்.

By subhashini · 17/10/2023

நான் பாடியும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் யுகேந்திரன் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் யுகேந்திரனும் ஒருவர். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்த மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார். மேலும், யுகேந்திரன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார்.

https://www.youtube.com/shorts/uWnP3CN_lNM

இவர் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும் இவர் சில படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும், இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து இருக்கிறார். அதிலும், குறிப்பாக இவர் தளபதி விஜயுடன் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்.

யுகேந்திரன் குறித்த தகவல்:

பின் சில வருடங்களாகவே இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரை குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்தது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 13 நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

https://www.youtube.com/shorts/N9iu7oKI3t0

பிக் பாஸ் சீசன் 7:

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து யுகேந்திரன் நன்றாக விளையாடி வருகிறார். இருந்தாலும், சில போட்டியாளர்களுடன் யுகேந்திரனுக்கும் இடையே சச்சரவுகள் இருக்கிறது.

யுகேந்திரன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு யுகேந்திரன் அளித்து இருந்த பேட்டி வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் பாடிய பல பாடல்கள் பலருக்குமே தெரியாது. நான் பாடி முடித்த பிறகு ஏதாவது சில பிரச்சனைகள் இருந்தால் எனக்கு பதில் வேறொருவரை வைத்து அதை சரி செய்து அவர்களுடைய பெயரை போட்டு வெளியிடுவார்கள். இது சினிமாவில் நடப்பது சகஜமான ஒன்றுதான். அந்த வகையில் சூர்யா நடித்த காக்கா காக்க படத்தில் என்னை கொஞ்சம் மாற்றி பாடல் நான் தான் பாட வேண்டும். ஏதோ சில காரணங்கள் தவற விட்டேன். அதேபோல் விஷால் நடித்த செல்லமே ஒரு பாடல் நான் பாட வேண்டியதாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=zKFDYWpgFtE

தவற விட்ட பாடல் வாய்ப்பு:

பின் தனுஷ் நடித்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்திலும் புதுக்கோட்டை சரவணா என்ற பாடலை நான் பாடிவிட்டேன். அதற்குப் பிறகுதான் வேறொருவரை வைத்து அந்த பாடலை பாடி என்னுடைய ஹம்மிங்கை மட்டும் அந்த பாடலில் வைத்திருந்தார்கள். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த சந்தானத்தின் படத்தின் பெயர் வச்சாலும் வைக்காத என்ற பாடலை நானும் சுவேதா பாடியிருந்தோம். ஆனால், பழைய வர்ஷன் நன்றாக இருக்கும் என்று மாற்றிவிட்டார்கள். ஒருவேளை அந்த பாடலை நான் பாடியிருந்து வெளி வந்திருந்தால் என்னுடைய கேரியர் மாறி இருக்கும். இப்படித்தான் சினிமாவில் பல எதிர்பார்க்காத நிகழ்வுகள் நடக்கும் என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full