தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா போன்ற பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். குடும்ப பின்னணி கொண்ட கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தளபதி 67 :

இந்த நிலையில் வாரிசு படம் வெளியாவதற்கு முன்னரே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகிய நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த தகவலை உறுதி படுத்தினார். மேலும் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தளபதி 67 அப்டேட் இன்னும் பத்து நாட்களில் வரும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய்யுடன் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியான வண்ணம் இருக்கிறது.

Advertisement

விஜய் படத்தில் பிக் பாஸ் பிரபலம் :

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த தகவலின் படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான செல்லக் குழந்தையான ஜனனி நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் இலங்கை தமிழ் பெண். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர்.குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனனி பற்றிய தகவல் :

இவர் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பிரப பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது.நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் கொஞ்சும் வைரலாகி இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், நிகழ்ச்சியில் இவர் அமுதவாணனின் கை பாகையாக இருந்தார்.

Advertisement

ஜனனி கூறியது :

இந்த நிலையில் இவர் சமீபத்தில் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பதக்கவும் விரைவில் தளபதி 67 படக்குழுவினருடன் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியுடம் கேட்டதற்கு ” இந்த தகவலை நான் சொல்வதை விட படக்குழுவினரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement

காஷ்மீரில் படப்பிடிப்பு :

ஜனனி இப்படி கூறியிருப்பது தளபதி 67ல் இவர் நடிக்க இருக்கிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் படியாக இருக்கிறது. மேலும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில் அடுத்ததாக படப்பிடிப்பு நடத்த காஷ்மீர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பிக் பாஸ் ஜனனி தளபதியுடன் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement