ஜனனியின் ஆஸ்கர் நடிப்பு, அமுதவானனை வச்சி செய்யும் நெட்டிசன்கள். வைரலாகும் Memes

By subhashini · 12/11/2022

ஜனனி செய்த செயலுக்கு ஆஸ்கார் கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். வழக்கம் போல் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் அசல் கோளாறு, ஷெரினா ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி:

இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரியாத பல புது நபர்களை போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்கள். அதில் இலங்கை தமிழ் பெண் ஜனனியும் ஒருவர். இவர் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளவர். குறிப்பாக, இவர் த்ரிஷாவின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஜனினுக்கு ரசிகர் கூட்டம் சேர்ந்து இருக்கிறது.

ஜனனி-அமுதவாணன்:

நிகழ்ச்சியில் ஜனனி பேசும் கொஞ்சும் தமிழும், கியூட்டான எக்ஸ்பிரஸனும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறது. இதனால் இவருக்கு இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இவர் அமுதவாணனின் கை பாகையாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி ஆரம்பம் முதலே இவர் அமுதவாணன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்து வருகிறார். இவருக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அமுதவாணன் வான்டட் ஆக ஆஜராகிவிடுகிறார்.

ஜனனி செய்த ட்ராமா:

இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் துண்டு விஷயத்தில் குயின்சிக்கு இவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது ஜனனி கையில் இருந்த டீ கப்பை உடைத்து கதறி அழுது இருந்தார். இந்த விஷயத்தை கமல் கூட கண்டித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடந்த டாஸ்கில் பெரிதாக பங்களிப்பு இல்லாத போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிடச் சொன்னார் பிக் பாஸ். பலரும் ஜனனி பெயரைத் தான் குறிப்பிட்டு இருந்தார்கள். அப்போது விக்ரமன், ஜனனி ஒரு தனித்துவமான போட்டியாளராக விளையாடாமல் இருக்கிறார். அவர் அமுதவாணனை சார்ந்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

நெட்டிசன்கள் செய்யும் கிண்டல்:

இப்படி விக்ரமன் சொல்லும் போதே அமுதவாணன் ஆஜராகி ஜனனிக்காக பேசியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜனனி, எனக்காக யாரும் வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று கதறி அழுதார். ஆனால், அவர் கண்களில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் ஜனனியை ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் ஜனனி, அமுதவாணனை விட்டு விலகி இருந்தாலே நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள், ஜனனி செய்வதெல்லாம் வெறும் டிராமா. அவருக்கு ஆஸ்காரையே கொடுக்கலாம் என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full