மணிகண்டன்-சோபியா விவாகரத்து விவகாரம்: ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த வேலை - பின்னணி இது தான்
பிக் பாஸ் மணிகண்டன்-சோபியா பிரிவு பற்றி மணிகண்டன் நண்பர்கள் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் மணிகண்டன். இவர் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணா. நடிகர் மணிகண்டன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவள்’ சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
இவர் வெள்ளித் துறையில் சில படங்களில் நடித்திருந்தாலும் இவரால் தனது தங்கை போல் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. அதன் பின் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியிலும் அவரால் டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் சினிமாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.
பிக் பாஸ் மணிகண்டன் குறித்த தகவல்:
தற்போது நடிகர் மணிகண்டன் அவர்கள் மெட்ராஸ் பிட்னஸ் ஜிம்மை தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில் மணிகண்டன் அவர்கள் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். சோபிதா அவர்கள் தினேஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அட்டகத்தி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தார். பின் இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மணிகண்டன்-சோபியா பிரிவு:
இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வந்தது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வரவில்லை. டிசம்பர் மாதத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் மணிகண்டன் ராஜேஷ் தனக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருப்பதாக போஸ்ட் போட்டிருந்தார். அதில் அவர், தன்னுடைய இரண்டாவது மனைவி, மகள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதன் மூலம் சோபிதா -மணிகண்டன் இருவருக்குமே விவாகரத்து ஆனது உறுதியாகி இருக்கிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
https://www.youtube.com/watch?v=Rm6ioI3N9oI
மணிகண்டன் நண்பர்கள் பேட்டி:
மணிகண்டன் போட்ட போஸ்ட் வெளியான சில மணி நேரத்திலேயே நடிகை சோபிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், என்னுடைய வாழ்க்கையின் புதிய அத்தியாயம் இப்போது தொடங்குகிறது. நான் இன்னும் வலிமையாக மாறி இருக்கிறேன் என்றெல்லாம் கூறியிருந்தார். அதோடு கலந்து சில வருடங்களாகவே இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சித்தார். ஆனால், எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இது விவகாரம் தொடர்பாக மணிகண்டனின் நண்பர்கள் அளித்த பேட்டியில், பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்தவரை அவருக்கும் சோபியாவுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை.
விவாகரத்துக்கு காரணம்:
பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தது. மணி தனியாக ஒரு பிசினஸ் செய்ய நினைத்தார். அதனால் முக்கால்வாசி நாள்கள் அவர் வீட்டிலேயே இருப்பதில்லை. இதனால் மணிகண்டனின் சகோதரி ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்தார். ஆனால், சரியாக வில்லை. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டார்கள். பரஸ்பரமாக விவாகரத்து வாங்கியது தெரியவந்தது. அதற்கு பிறகு தான் மணி சாய் என்ற பெண்ணுடன் பழகியிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு கொஞ்ச நாள்களிலேயே அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு தான் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.