'கடந்த காலங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று' கண்ணீருடன் ரஷிதா பதிவிட்ட வீடியோ - ரசிகர்கள் ஆறுதல்.

By Rajkumar · 25/7/2023

கணவரை பிரிந்து வாழும் ரஷிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதோடு இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். கடைசியாக இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை சீரியலில் நடித்தார்.

இப்படி ஒரு நிலையில் தான் ரக்ஷிதா பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். ரக்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை சரியாகிடும் என்று பார்த்தால் சரியாகவில்லை. அவர்கள் தங்களுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ரஷிதாவின் இன்ஸ்டா பதிவு :

இப்படி ஒரு நிலையில் தினேஷ் தனக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்புவதாவும் தன்னை மிரட்டுவதாகவும் மாங்காடு காவல் நிலையத்தில் இரவவோடு இரவாக ரஷிதா புகார் அளித்தார். இந்த நிலையில் கணவர் மீது புகார் அளித்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஸ்டோரிகளை வைத்திருந்தார் ரஷிதா அதில், நீங்கள் அமைதியை உருவாக்கிகொண்டால், மற்றவர்களுக்கு எப்போது தாக்க வேண்டும் என்பது தெரியாது (When you build silence, people don't know when to attack) என்றும் மற்றொரு ஸ்டோரியில், பலமாக இருப்பது தான் கடைசி வழி (Being strong is the only option left ) என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

View this post on Instagram

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளை போட்டுள்ளார் ரஷிதா. அதில் ஒரு பதிவில் ' நான் அனைத்தயும் உள்ளேயே வைத்து இருந்ததற்கு காரணம் இருக்கிறது.எந்த வருத்தமும் இல்லை, பாடத்தை கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் பொய்கள் எப்போதும் சத்தமாக தான் இருக்கும், உண்மைகள் அமைதியாக தான் இருக்கும். எந்த வருத்தமும் இல்லை, பாடத்தை கற்றுக்கொண்டேன்' என்றும் கூறி இருந்தார்.கண்ணீருடன்

ரஷிதா பதிவிட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் சுடரி பாடலை கேட்டபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஷிதா 'வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக… கடந்த காலங்களை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்று பெருமைப்படுங்கள். இந்த மௌன போர்கள், உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் உங்கள் கண்ணீரை துடைத்துக் கொண்டு… உங்கள் முதுகில் உங்களை தட்டிக் கொள்ளுங்கள் பாடலில் ஆழமாக போகிறேன் கண்களை நிறைக்கும் அந்த மந்திர வார்த்தைகள்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

தினேஷ் விளக்கம் :

ரஷிதாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, ரசிதாவின் புகார் குறித்து பேசிய தினேஷ், நாங்கள் இருவரும் சேர எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், காவல் நிலையத்தில் அவரை பார்த்த போது இனி சேர வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அவர் யாரோ ஒருவரின் தூண்டுதலில் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று கூறி இருந்தார் தினேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full