தம்பி மாதிரி பார்த்தேன், fraud என்னை இப்படி ஏமாத்திட்டான் - பிக்பாஸ் தாமரை செல்வி குமுறல்

By subhashini · 27/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் மக்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்று வருகிறது. இந்த சீரியலில் தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்வேதா. இவர் இந்த சீரியலில் தொடங்கும் போது தான் ஆதி என்பவரை காதலிப்பதாக கூறியிருந்தார். ஆதிக்கும் ஸ்வேதாவுக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு திருமணம் நடந்து விட்டது. ஆனால், அதை வெளியில் சொல்லாமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார்கள். பின் இடையில் இருவருக்கும் ப்ரச்சனை என்பதால் பிரிந்து விட்டார்கள்.

மேலும், ஸ்வேதாவிற்கும் அவருடைய கணவர் ஆதிக்கும் இடையே பிரச்சனையாகி தற்போது விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் ஆதி மீது நடிகையும் பிக் பாஸ் பிரபலமான தாமரைச்செல்வி பணம் மோசடி புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அளித்த பேட்டியில் தாமரைச்செல்வி, ஸ்வேதாவும் நானும் ஒரே சீரியல் தான் நடித்தோம். அந்த பையன் அவர்களுக்கு எப்படி அறிமுகமானார் என்று தெரியாது. எனக்கு அவர்களுடைய கணவராக தான் அறிமுகமானார். நான் என்னுடைய வீட்டுக்காரர் அவங்க ரெண்டு பேர் என்று நாங்க ஜோடியாக நிறைய இடங்களுக்கு டூர் எல்லாம் போயிருக்கிறோம்.

ஸ்வேதா-ஆதி விவகாரம்:

திடீரென்று அவர்களுக்கிடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆதி எங்களிடம் வந்து ரொம்பவே அழுதான். என் வீட்டுக்காரர். அவங்க பேமிலி பிரச்சினையில் நாம் தலையிட வேண்டாம் என்று சொன்னார். ஆனால், எனக்கு தான் மனசு கேட்கவில்லை. இவனுக்காக ஸ்வேதா வீட்டில் எல்லாம் பேசினேன். ஆனால், அதற்குள் அவர்கள் பிரச்சினை அதிகமாகிவிட்டது. இப்ப விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல என்னாலும் இந்த பிரச்சனையில் தலையிட முடியவில்லை. நானும் விலகி விட்டேன். இவனுடைய எல்லா பொருள்களையும் பறித்துக் கொண்டு வீட்டை விட்டு ஸ்வேதா துரத்தி விட்டதாக சொல்லி ஆதி என்னிடம் வந்து அழுதான்.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

தாமரை செல்வி பேட்டி:

அப்பவும் நாங்க எங்க வீட்டில் தங்க அனுமதித்தோம். லேப்டாப் சில பொருட்களை வாங்க என்னிடம் பணம் கேட்டார். நானும் உதவி செய்தேன். பணமாகவே கொஞ்சம் கொஞ்சமாக நான் 7 லட்சம் வரை கொடுத்திருக்கிறேன். ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரமோஷன் செய்து தர வேலைதான் பார்க்கிறேன் என்று சொன்னான். வேலை கொஞ்சம் பிக்கப் ஆனதுமே காசு வந்துவிடும் உங்க பணத்தை திருப்பி தந்துகிறேன் என்று சொல்லியே திரும்பத் திரும்ப கடன் வாங்கினான். ஒரு கட்டத்தில் எனக்கே பணக்கஷ்டம் வந்தது. அந்த சூழலில் ஒரு நாள் திடீரென்று அவன் அவசரமாக பணம் கேட்டு வந்து அழுதான். பணம் இல்லை என்று சொன்னாலும் அவன் கேட்கவில்லை. எனக்கு அது பெரிய வாய்ப்பு தயவு செய்து உதவி செய்யுங்கள் என்று ரொம்பவே கெஞ்சினான்.

https://www.youtube.com/watch?v=D3vSyCwmB5k

ஆதி மீது புகார்:

இதனால் நான் வேறு வழியில்லாமல் என்னிடம் இருந்த மூன்று சவரன் நகையை அடகு வைத்து பணம் கொடுத்தேன். அப்ப நான் செய்த ஒரே தப்பு அவன் பேரில் அடகு வைத்ததுதான். உள்ளூரில் அடையாள அட்டை வேணும் என்று சொன்னதால் தான் அவன் பெயரில் நகையை வைக்க ஒத்துக் கொண்டேன். ஆனால், நகையை அடகு வைத்த பத்தாவது நாளிலேயே அவன் நகையை மீட்டு எனக்கே தெரியாமல் வித்து விட்டான். அதற்கு பிறகு அவன் என்னுடைய நம்பரை பிளாக் செய்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். என்னைப் போலவே அவன் பலரிடம் ஏற்கனவே ஏமாற்றி இருக்கிறான் என்று அதற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. தம்பி மாதிரி நினைத்து உதவி செய்தேன். என்னை ஏமாற்றி விட்டான். இப்போது நான் போலீசில் புகார் தந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full