தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சில வாரங்களாகவே சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது. . அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவித்தார்.விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படம் விஜய் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும் ஆவலையும் தூண்டியுள்ளது. தியேட்டரில் பிகில் படம் குறித்து டிக்கெட்டுகள் கேட்டு கூட்டங்கள் குவிகின்றன. இதற்காக விஜய் ரசிகர்கள் ‘தளபதி63’ என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து 2017 முதல் விஜய் நடிப்பில் வந்த படங்கள் எல்லாமே தீபாவளி பண்டிகை அன்று தான் வெளியாகி வருகிறது என்ற தகவல் இணையங்களில் வெளிவந்தது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில், கொண்டாட்டத்திலும் உள்ளனர்.பிகில் படம் சரவெடி போல் அதிர வைக்கப் போகிறது என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இன்னும் சில மணி நேரங்களில் வரப்போகிறது என்ற தகவலை அறிந்த உடன் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாக தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் மேடையில் தளபதி விஜய் என்ன பேசப் போகிறார்? என்ற கேள்வி மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முன்னால் வெளிவந்த புலி, சர்க்கார்,கத்தி ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் புதிய எண்ணத்தையும் தோற்றுவிக்கும் வகையிலும் , பல அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி வேலையை குறித்தும் , அரசியல்வாதிகளுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அப்படிப் பார்த்தால் இந்த முறை விஜய் எதை குறித்து பேச போகிறார்? என்று அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றன ரசிகர்கள்.

Advertisement

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் அப்பா விஜய் கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட ஆகவும் அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகில் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும். இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை குறித்த ஒரு வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார்கள்.மேலும், இதை தொடர்ந்து இளைய தளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டும் ஒரு போட்டி வைக்க போகிறேன் என்று நடிகை ரம்யா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று இலவசமாக பிகில் படத்திற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த இசை வெளியிட்டு திருவிழாவை ரம்யா தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரையரங்கிற்கு கொண்டு வர இருப்பதாக ஒரு சில செய்திகளும் வந்துள்ளன. ஏனென்றால் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமையாக உள்ளதால், 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திரையுலகிற்கு கொண்டுவரலாம் என்று ஒருபுறம் ஆலோசனை செய்துள்ளார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்..பிகில் படத்தின் பாடல்கள் எல்லாம் இணையங்களிலும்,பாட்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertisement
Advertisement