தமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் ‘இளைய தளபதி’ விஜய்.அவரின் 63 வது படமான “பிகில்” படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வரப்போகிறது. அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு திருவிழா நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் அறிவித்தார்.விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படம் விஜய் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும் ஆவலையும் தூண்டியுள்ளது. தியேட்டரில் பிகில் படம் குறித்து டிக்கெட்டுகள் கேட்டு கூட்டங்கள் குவிகின்றன.

இந்த படத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார்.அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்து உள்ளார். இதில் மகன் “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான ,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது.இந்த பிகில் படம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இதில் அப்பா விஜய் ராயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததால் இந்த படத்தில் அதிரடியாகவும், ஆக்சன் காட்சி ஆகவும் இருக்கும் கதாபாத்திரம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் அப்பா விஜய் கதாபாத்திரத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.மேலும்,தளபதி63 என்ற ஹாஸ்ட்டாக்கை உருவாக்கி பிகில் படத்திற்கான தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

விஜய் படம் என்றாலே ஒரு பிரம்மாண்ட ஆகவும் அதிக பட்ஜெட் செலவிலும் இருக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகில் படம் ஒரு மாபெரும் வெற்றி விழாவை கொண்டாடும் அளவிற்கு எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் மக்களை சந்தோஷப்படுத்தும் வகையில் அவர்கள் திருப்தி அடையும் வகையில் உள்ளது என்று கூறி உள்ளார்கள்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும்.இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான மேடையை தயார் செய்து வருகிறார்கள் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை குறித்த ஒரு வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார்கள்.மேலும், இதை தொடர்ந்து இளைய தளபதியின் பெண் ரசிகைகளுக்கு மட்டும் ஒரு போட்டி வைக்க போகிறேன் என்று நடிகை ரம்யா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அன்று இலவசமாக பிகில் படத்திற்கான டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் இந்த இசை வெளியிட்டு திருவிழாவை ரம்யா தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 63 வது படமான பிகில் படம் தீபாவளியன்று வரப்போகிறது என்று படக்குழுவினர் அறிவித்தனர்.மேலும் தீபாவளி அன்று திரை உலகிற்கு வரவிருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் தனுஷின் பட்டாசு ஆகிய இரு படங்களும் தள்ளி வைத்து உள்ளார்கள். இது குறித்து பிகில் படம் மட்டுமே தீபாவளிக்கு திரைக்கு வரப்போகிறது. மேலும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கிடா விருந்தாக இருக்கும் என்று வலைதளங்களில் பரவிவருகிறது.

Advertisement

அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரையரங்கிற்கு கொண்டு வர இருப்பதாக ஒரு சில செய்திகளும் வந்துள்ளன. ஏனென்றால் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக் கிழமையாக உள்ளதால், 24ஆம் தேதி வியாழக்கிழமை அன்று திரையுலகிற்கு கொண்டுவரலாம் என்று ஒருபுறம் ஆலோசனை செய்துள்ளார்கள். கூடிய விரைவில் இதுகுறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும்.பிகில் படத்தின் பாடல்கள் எல்லாம் இணையங்களிலும்,பாட்டு சேனல்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது

Advertisement