பிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியம்.! அப்பா விஜயோட பெயர் தெரியுமா.?

By Rajkumar · 23/6/2019

சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் கடந்த 21 ஆம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 இரவு 12 மணிக்கும் வெளியிட பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மூலம் இந்த படத்தில் விஜய் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் பெயர் மைக்கெல் என்பது அவர் அணிந்திருக்கும் ஜெர்ஸியின் மூலம் தெரிகிறது. சிலர் இளம் வயது விஜய்யின் அப்பாவாக வரும் வயதான விஜய்யின் பெயர்தான் பிகில் என்று சொல்கின்றனர்.

ஆனால், அந்த பெயரும் கால்பந்தாடும் இளம் விஜய்யின் செல்லப் பெயர்தானாம். வயதான விஜய்யின் பெயர் ராயப்பன் என்று புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அப்பா விஜய்யின் கெட்டப் மாஸாக இருக்கிறது என்று பலரும் நினைத்து வரும் நிலையில் தற்போது அவரது பெயரும் படு மாஸாக இருக்கிறது என்று குஷியாகியுள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full