என்ன சிங்கப்பெண்ணே இதெல்லம் - பிகில் பட நடிகையின் போட்டோ ஷூட்டை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

By Rajkumar · 30/8/2021

அட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்திரஜா, இந்துஜா, ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்து இருந்தனர்.

மேலும், இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த பல்வேறு புது முக நடிகைகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் இளம் நடிகையான ரேபா மோனிகா ஜானும் ஒருவர். இந்த படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா. மேலும், இந்த படத்தின் ஒரு காட்சியில் காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்று இவர் முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார்.

இதையும் பாருங்க : தன்னை பற்றி தவறாக பேசிய ஜோ மைக்கேல் - ஆடியோவை கேட்டு சின்மயி போட்ட பதிவுக்கு ஜோ மைக்கேல் பதிலடி.

இதனால் கால்பந்து விளையாடுவதையே நிறுத்துவிடுவார் அனிதா (ரேபா). அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து போட்டியில் பங்கு பெற செய்வார். இவரின் ரீ- என்ரியின் போது தான் 'சிங்கப்பெண்னே' பாடலே வரும். இவர், ஜெய் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஜருகண்டி' என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், பிகில் படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஏற்பட்டது.

அதே போல சமீபத்தில் இவரும் குக்கு வித் கோமாளி அஸ்வினும் இணைந்து நடனமாடிய 'குட்டி பட்டாஸ்' ஆல்பம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. தற்போது இவர், விஷ்ணு விஷாலின் FIR படத்தில் நடித்து வருகிறார். படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் சமீபத்தில் லோ நெக் உடையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன சிங்கப் பெண்ணே இதெல்லாம் என்று புலம்பி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full