பாவாடை மட்டும் கட்டிக்கொண்டு நடித்துள்ள பிகில் பட நடிகை வர்ஷா - சிங்கபெண்ணா இப்படி ?

By Rajkumar · 10/3/2021

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி வசூலை அடைந்து சாதனையை பெற்றது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசைஅமைத்திருந்தார். மேலும், தெரி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்தது விஜய் மற்றும் அட்லியின் கூட்டணி.

பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்திருந்தனர். இதில் ஒரு சில நடிகைகள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் அறிமுகமாகியிருக்கி இருந்தார்.

இதையும் பாருங்க : வலிமை அப்டேட் தானே கேட்பீங்க - தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வலி'மை' போஸ்டரை பாருங்க.

இந்த படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வர்ஷா. நடிகை வர்ஷா பிகில் திரைப்படத்திற்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சத்துரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படவில்லை.அதன் பின்னர் வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இவர் கவனிக்கப்பட்டது என்னவோ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தின் மூலம் தான்.

இந்த திரைப்படத்தில் நடிகை வர்ஷா விஜய் சேதுபதியை காதலிக்கும் மாணவியாக நடித்து இருந்தார். இவர் பதிவிடும் சில புகைப்படங்களை பிரபல நடிகையான நஸ்ரியாவுடன் ஓப்பிட்டு நீங்கள் நஸ்ரியா போலவே இருக்கிறீர்கள் என்று பல்வேறு மீம்கள் கூட சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில், படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில் நடித்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full