கழுத்தில் சிலவை.! நெற்றியில் குங்குமம்.! பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டர்.!

By Rajkumar · 22/6/2019

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு 'பிகில்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜயுடன் மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லீ கைகோர்த்தார். படத்துக்கு பெயரிடப்படாமல் ‘தளபதி63’ என்ற பெயரிலே படப்பிடிப்பு நடந்துவந்தது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.இந்தப்படத்தில் நயன்தாரா,  நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூன் 21 ) மாலை 6 மணிக்கு வெளியானது. படத்திற்கு 'பிகில்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த போஸ்டரில் அப்பா மகன் கெட்டப்பில் அசத்தி இருந்தார் விஜய். அதிலும் இளமையான தோற்றத்தில் இருக்கும் விஜய் அனைவரையும் கவர, கெத்தாக இருக்கும் அப்பா விஜய் ஒரு பக்கம் மாஸாக இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் திரைப்படத்தில் செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவில் படக்குழு வெளியிட்டது.

https://twitter.com/actorvijay/status/1142137625400078336

மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரர் விஜய், கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் மற்றொரு விஜய் என இரண்டாவது போஸ்டர் உள்ளது. இன்று (ஜூன் 22 )நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் அவர் ரசிகர்கள் படப்போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full