பிகில் படத்திற்கு யூடுயூப் கொடுத்த அங்கீகாரம்.. நன்றி தெரிவித்த அட்லீ.. தளபதி மாஸ்..

By Rajkumar · 14/10/2019

இளையதளபதி விஜயின் பிகில் படத்தின் டிரைலர் தான் தற்போது யூடியூபை தெறிக்கவிட்டு வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிகில்படத்தில் நடித்துள்ளார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்க்கு ஜோடியாக ஆக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடித்திருக்கிறார். இவர்களை தவிர படத்தில் விவேக், யோகி பாபு, கதிர், இந்துஜா, ஆனந்த் ராஜ், ஜாக்கி ஷராப் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

https://twitter.com/YouTubeIndia/status/1183707360168173568

இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாக இருக்கிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பல மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால், படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. எதிர்பார்த்ததைப் போல இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டி விட்டுள்ளார். அதிலும் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ராயப்பன் விஜய் ட்ரைலரில் மிரட்டி இருந்தார். ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்த ட்ரெய்லர் வெளியான வெறும் மூன்று மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு பெரும் சாதனையை செய்திருந்தது. இதோடு மட்டுமில்லாமல் யூடுயூபில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல யூடியூப் நபர் நிறுவனம் பிகில் திரைப்படங்களை பாராட்டும் வகையில் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளது. அதில் பிகில் டிரைலரில் இடம் பெற்ற சில புகைப்படங்களை பகிர்ந்து விஜய், ஆர் ரகுமான், அட்லி இணைந்தால் வெறித்தனத்தை உச்சத்தை காணலாம் என்று பிகில் திரைப்படத்தின் ட்ரைலரின் லிங்கையும் பதிவிட்டு உள்ளது. இது பிகில் படத்திற்கும் நடிகர் விஜய்க்கும் கிடைத்த மாபெரும் ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. யூடியூபின் இந்த பதிவினை கண்ட இயக்குனர் அட்லி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/Atlee_dir/status/1183714541806292993

தற்போது வரை பிகில் டீசர் 23 மில்லியன் பார்வைகளால் பார்க்கப்பட்டு மாபெரும் சாதனையை செய்துள்ளது. மேலும், யூடுயூபில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜீரோ திரைப்படத்தின் ட்ரைலர் தான் அதிக லைக் செய்யப்பட்ட ட்ரைலராக இருந்து வந்தது. ஜீரோ திரைப்படத்தின் டிரைலர் 1.9 மில்லியன் பார்வையாளர் லைக் செய்து யூடுயூபில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்ரெய்லரில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிகில் படத்தின் ட்ரைலர் 1.8 மில்லியன் நபர்களால் லைக் செய்யப்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் ஒருவரின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கவினிக்கப்பட வேண்டியது என்னவெனில் ஷாருக்கானின் ஸிரோ ட்ரைலர் கடந்தஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஆனால், பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி வெறும் 2 நாட்கள் மட்டும் தான் ஆகியுள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே கடந்த ஒரு வருடமாக ஷாருக் கான் செய்து படத்தின் ட்ரைலர் சாதனையை தும்சம் செய்துள்ளது. இதன் மூலம் தளபதியின் மாஸ் என்னவென்று பலரும் உணர்ந்துள்ளனர். இதனால் பிகில் பட குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full