பிகில் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.!

By ·

சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கபட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் கடந்த 21 ஆம் தேதியும், செகண்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22 இரவு 12 மணிக்கும் வெளியிட பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மூலம் இந்த படத்தில் விஜய் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானது.

மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் பெயர் மைக்கெல் என்பது அவர் அணிந்திருக்கும் ஜெர்ஸியின் மூலம்உறுதியானது. வயதான விஜய்யின் பெயர் ராயப்பன் என்று புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதே போல இந்த படத்தில் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் இருவரும் ஒரே பிரேமில் தோன்றுவார்களாம்.

இந்த படத்தில் விஜய்யின் அப்பா கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைக்க தான் திட்டையுள்ளனர். ஆனால், அந்த கதாபத்திரத்தில் பின்னர் விஜய்யே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் சத்யராஜ் ஏற்கனவே தலைவா படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை