காதலருடன் எக்கச்சக்க ரொமான்ஸ் போஸ். ஓவர் காதலில் பிகில் பட வில்லனின் மகள்.

By Rajkumar · 3/5/2020

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜாக்கி ஷெராஃப். இவர் தமிழில் சம்பத்தின் 'ஆரண்ய காண்டம்', சந்தீப் கிஷனின் 'மாயவன்', பிரபாஸின் 'சாஹோ' போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இப்படங்களில் அதிகமாக நெகட்டிவ் கேரக்டர்களிலையே வலம் வந்திருக்கிறார் ஜாக்கி ஷெராஃப். கடைசியாக ஜாக்கி ஷெராஃப் தமிழ் திரையுலகில் நடித்த படம் ரொம்பவும் ஸ்பெஷல்.

https://www.instagram.com/p/B_pUWQxg4e8/

ஏனெனில், அந்த படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'தளபதி' விஜய் நடித்திருந்தார். அது தான் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் 'பிகில்'.

இந்த படத்தினை பிரபல இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இதில் 'தளபதி' விஜய்-க்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் மிக முக்கிய ரோலில் வலம் வந்திருந்தார் ஜாக்கி ஷெராஃப். அதுவும் பவர்ஃபுல்லான வில்லன் கதாபாத்திரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மாஸ் ஹிட்டானது. நடிகர் ஜாக்கி ஷெராஃப்பிற்கு கிருஷ்ணா ஷெராஃப் என்ற மகளும் இருக்கிறார். 27 வயதான இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பாலிவுட் இளம் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் கூட பிகினி உடையில் புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். மேலும், இவர் இபான் என்பவரை காதலித்து வருகிறார். அடிக்கடி தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தனது காதலருடன் படு ரொமான்டிக் போஸ்களை அள்ளி வீசியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full